மேகதாதுவில் புதிய அணை – திருச்சியில் போராட்டம்


பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் டிசம்பர் 4ம் தேதி திருச்சியில் நடத்தப்படுமென திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற  அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் ஸ்டாலின் இதை தெரிவித்தார்.

 

தமிழ் நாட்டை பாதிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு நடுவண் அரசு காநாடக அரசுக்கு அனுமதி அளித்திருப்பதை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

 

அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியபோது கஜா புயலால் உயிரிழந்த தோழர்களுக்கும், விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுதான் ஆலோசனைகள் தொடர்ந்தன.

 

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை, மாநில அரசு உடனடியாக கூட்டி ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி அதை நடுவண் அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

 

கட்சி வேறுபாடுகளை மறந்து, அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் அழைப்புவிடுத்துள்ளார்.

Add new comment

7 + 2 =