மனைவியை விட்டுவிட்டு வெளிநாடா? – எச்சரிக்கை


மனைவியை கைவிட்டு விட்டு கணவர் மட்டும் வெளிநாடு சென்று வேலை செய்வதற்கு எதிராக சட்டம் கொண்டுவர இந்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.

 

மனைவியை இந்தியாவில் விட்டு விட்டு வெளிநாட்டில் மனம்போல் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எதிரான மத்திய அரசின் கடும் நடவடிக்கையாக இது இருக்கும்.

 

மனைவியை கைவிட்டு விட்டு வெளிநாடு செல்லும் சம்பவங்கள் தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களில் நீண்டகாலமாகவே நடந்து வருகின்றன.

 

இவ்வாறு வெளிநாடு வாழ் இந்தியர்களால் கைவிடப்பட்ட மனைவியரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

 

இந்தியாவிலுள்ள மனைவியை விவாகரத்து செய்யாமல் வாழும் நாட்டில் வேறு பெண்ணுடன் சேர்ந்து வாழ்கின்றனர்.

 

இது ப்றிய விவரமே தெரியாமல் கணவன் வந்து அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் பல ஆண்டுகளை பெண்கள் கழிக்கும் நிலைமை இந்தியாவில் நிலவுகிறது.

 

இந்த முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான சட்டம் இயேற்றப்படலாம் என தெரிகிறது.

Add new comment

4 + 2 =