Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பிறரையும் நேசி!
இன்று உனக்கு என்றால் நாளை எனக்கும் இருக்கலாம். உன்னைப்போல் பிறரையும் நேசி.
அதோ அந்த வீட்டில் குடி இருந்த குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். நிம்மதியான மகிழ்ச்சி இல்லை என்று சொல்லலாம். ஏனெனில் அவ்வீட்டின் உணவுப்பொருட்களை திருடித் தின்னும் ஒரு எலி அங்கு இருந்தது அதன் நண்பர்களாக ஒரு கோழியும் ஒரு ஆடும் வளர்ந்து வந்தன. நாள் ஆக ஆக எலியின் இம்சையை அவரால் தாங்க முடியவில்லை. ஒரு நாள் குடும்பத்தார் இரவு உணவு உண்ணும் போது எலித்தொல்லை பற்றி பேசப் பேச, பேசி மால முடியவில்லை. அந்த எலியை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டும் எனவும், அதற்கான எரிபொரி ஒன்றினை வாங்கி வைக்க வேண்டும் எனவும் முடிவு எடுத்தனர். இந்த சம்பவத்தை கேட்டுக்கொண்டிருந்த எலிக்கு பயம் கவ்விக்கொண்டது.
மறுநாள் விடிந்தவுடன் தனது வாழ்வின் சோக முடிவை தனது தோழி கோழியுடன் பரிதாபமாக கூறியது. ஆனால் கோழியோ அதன்மேல் இஞ்சிக்கும் பரிதாபம் படவில்லை. அது உன் விதி எப்படியோ போய் கொள் என்று கூறி விட்டு வேறு இடத்தில் தீனியை பொறுக்கி எடுக்க சென்றுவிட்டது. கோழியின் கடின இதயத்தை அறிந்த எலியோ அங்கிருந்து நகர்ந்து அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டிடம் சென்று தனது சோகக் கதையை எடுத்துக் கூறியது. அந்த ஆடு கூட ஈவு இரக்கமின்றி நீ எப்படியாவது போய்க்கோ என்னிடம் வந்து ஏன் சொல்ற உன் பொழப்பை நீ பார்த்துக்கோ என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டது. இது இவ்வாறு இருக்க அன்றைய நாளில் அந்த வீட்டு அம்மா சமையலுக்கான காய்கறிகளை வெட்டும்போது கூறிய கத்தியில் தனது கையை வெட்டிக் கொண்டதால் வீல் என்று கத்தினாள். அவளது கணவர் வெட்டின கையிலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். மருத்துவர் கை கட்டு போட்டு விட்டு அவரிடம் இந்த அம்மாவிற்கு அதிக அளவில் ரத்தம் போய் விட்டது எனவே வீட்டிற்கு சென்று கோழி சூப் வைத்துக் கொடுங்கள் என்று கூறிவிட்டார். எனவே வீட்டிற்கு வந்தவுடன் வீட்டிலிருந்த கோழியை பிடித்து அறுத்து சூப் வைத்துக் கொடுத்தார். அந்த அம்மா இரண்டு மூன்று தினங்களுக்கு கோழி சூப் குடித்து தனது உடம்பை வைத்துக் கொண்டாள். இந்த நிகழ்ச்சி அந்த குடும்பத்தாருக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. தங்களது மகிழ்ச்சியை தங்கள் உற்றார் உறவினருடன் பகிர்ந்துகொள்ள அவர்கள் வளர்த்த ஆட்டினை அடித்து விருந்து கொண்டாடினர். அய்யய்யோ! பிறர் மீது இரக்கம் கொள்ளாத கோழியும் ஆடும் பலியாகிவிட்டனவே!. அந்தக் கோழியும்,ஆடும் தங்களுக்கு சாவு இவ்வளவு சீக்கிரம் வரும் என துளி கூட நினைக்கவில்லை.
ஆம் பிரியமானவர்களே கொரோனா என்னும் கொடிய தொற்று நோய் இதோ இவர்களைத்தான் பாதிக்கும் அது அவர்களை தான் பாதிக்கும் என்னை ஒன்றும் செய்யாது என் குடும்பத்தை ஒன்றும் செய்யாது நான் பத்திரமாக இருப்பேன் என இறுமாந்து இருக்கக்கூடாது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து மனிதநேயத்துடன் வாழ்வோம். அவர்களுக்காகவும் அவர்கள் குடும்பங்களுக்கும் செபிப்போம். நோய் தடுப்புக்கான வழிகளை கையாண்டு நம்மை நாம் தற்காத்துக் கொள்வோம்.
"உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி....."- பைபிள்
-அருட்சகோதரி ப்ரேமிலா.S. இருதயநாதன் SAP
Add new comment