ஆசையா தேவையா – இந்த ஆசை தேவையா?

நம்முடைய தேவைகள் என்ன? நம்முடைய தேவையானவற்றை மட்டும்தானா நாம் வைத்திருக்கின்றோம்? நம்முடைய தேவைகள் ஆசையாக மாறுகின்றபோது, இந்த உலகம் அழிக்கப்படுகின்றது, மாசுபடுகின்றது. மனிதர்கள் வாழ்வையும், உறவையும் சிதைத்துக்கொள்கிறார்கள். ஆசையின்படி வாழும் வாழ்க்கை? தேவையின்படி வாழும் வாழ்க்கை? வேண்டும்-வேண்டும், இன்னும்-இன்னும், மேலும்-மேலும் என்ற ஆசைகள் வளருகின்றபோது, நம்முடைய வாழ்வு மனஅழுத்தத்தில் முடிவடைகின்றது. ஆரோக்கிய மற்றவர்களாக மாறுகின்றோம். இயற்கையோடு இயந்த வாழ்க்கை வாழவேண்டும்.

எத்தனை கார் வேண்டும்? எத்தனை சேலைகள் வேண்டும்?

மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்முடைய தேவையை அதிகரிக்கின்றோமா?

நம்முடைய தேவையை பிள்ளைகளின் ஆசையாக மாற்றுகின்றோமா?

மலைவாழ் மக்கள் இயற்கையோடு இயந்து வாழ்கிறார்கள் இன்றும் காரணம் என்ன?

இவ்வாறு இக்காலக்கட்டத்தில் நம்முள் எழும் எண்ணற்ற கேள்விகளுக்கு மானுடவியல் பார்வையில் வழிகாட்டுகிறார்கள் முனைவர் ஜோ அருண் சே.ச. அவர்கள். பார்த்துப் பயன்பெறுவோம். மற்றவர்களுடன் பகிர்வோம்.

 

Facebook: http://youtube.com/VeritasTamil

Twitter: http://twitter.com/VeritasTamil

Instagram: http://instagram.com/VeritasTamil

SoundCloud: http://soundcloud.com/VeritasTamil

Website: http://www.RadioVeritasTamil.org

Blog: http://tamil.rvasia.org

**for non-commercial use only**

 

Add new comment

3 + 1 =