சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பது உறுதி


சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுவது உறுதி என்று கேரளா முதல்வா் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

 

இந்திய உச்சநீதிமன்ற தீா்ப்பை மதித்து செயல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அனைத்து கட்சிகளின் கூட்டத்திற்கு பின்னர் முதல்வா் பினராயி விஜயன் செய்தியாளா்களை சந்தித்தபோது, இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

 

கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பா் மாதம் 28ம் தேதி தீா்ப்பு வழங்கியது.

 

ஆனால், அதன் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையிலும் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினா்.

 

இன்னும் சில நாட்களில் பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படவுள்ள நிலையில், போராட்டங்கள் ஆங்காங்கு நடைபெற்று வருகின்றன.

 

இந்த பிரச்சனை தொடர்பாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அனைத்து கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டாலும், பாதியிலேயே வெளியேறின.

Add new comment

4 + 3 =