Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தாக்கப்படும் தேவதைகள்
‘தங்கள் சேவைக்காக கைகூப்பி வணக்கம் செலுத்தவேண்டிய செவிலியர்களையும், மருத்துவமனை ஊழியர்களையும், அவசர ஊர்தி ஊழியர்களையும் இழிவுபடுத்தும் செயல் அரங்கேறியுள்ளது. உலகெங்கும் மக்கள், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பணியாற்றிவிட்டு வீடு வரும் போதோ அல்லது வீடுகளில் உள்ள நோயாளிகளை சந்தித்து பணிவிடை செய்யும் பொழுதோ தங்களுக்கு இவர்கள் அறிந்தோ அறியாமலோ தொற்றை ஏற்படுத்தி விடக்கூடும் என்ற அச்சத்தில் பணிபுரியும் செவிலியர்களையும், மருத்துவமனை ஊழியர்களையும், அவசர ஊர்தி ஊழியர்களையும் இழிவுபடுத்தும் செயல் அரங்கேறியுள்ளது.
இது மிகவும் வருத்தத்துக்கு உள்ளானது. தயவு செய்து அவர்களை மதிக்கவும், அவர்களின் சேவையை மதிக்கவும், அவர்களுக்கு வணக்கம் செலுத்தவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். இவர்கள் வாழும் தேவதைகள். அவர்களுடைய மனதை நோக செய்யாது இருப்பதே மிகவும் சரியானது. இப்படிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்று எச்சரித்து இங்கிலாந்து அரசு தனது செவிலியர்களை செவிலிய உடையிலோ தன்னுடைய பெயர் பலகையை பொரித்த உடையில் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
அதற்கு ஒத்த வகையில் செவிலியர் ஒருவர் பொதுமக்களால் பிரித்தானியாவில் இழிவு படுத்தப்பட்டது தெரியவந்திருக்கிறது. அதே நாட்டில் மற்றொரு செவிலியர் மீது எச்சில் துப்பி இழிவு படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் கூட மருத்துவ பணியாளர்களும் அவசர ஊர்தி இயக்குபவர்கள் அவர்களின் தேவைக்கு நீரோ உணவோ - மனிதராக கருதப்படாத ஒருவருக்கு கொடுப்பதை போன்று வழங்கப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது.
Add new comment