கொரோனா நேரத்திலும் காவலரின் பரிவு நடவடிக்கை


பரிதவித்த சிறுவன் - ஓடிவந்த காவலர்

உலகம் முழுவதும் வீட்டிலேயே இருந்து கொரோனா தொற்றிலிருந்து தன்னையும் உலகத்தையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஜெர்மனியில் பவேரியா வை சேர்ந்த 11 வயது சிறுவன்  வீட்டில் தன் தாய் இல்லை என்று பதறி அழுதுகொண்டே காவல் நிலையத்தின் அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு இருக்கின்றார். நாடு முழுவதும் வீட்டில் இருக்கின்ற வேலையிலே தாயை காணாத சிறுவனின் தவிப்பை புரிந்து கொண்ட காவலாளி உடனடியாக அந்த வீட்டிற்கு சென்று அந்த சிறுவனுக்கு பிரட்டம் சாக்கலேட் கொடுத்து சமாதானப்படுத்திய வேளையில், வெளியே சென்றிருந்த அவரது தாய் வீட்டிற்கு திரும்பியுள்ளார். மகனை தாயிடம் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு பிற பணிகளை தொடர சென்றிருக்கிறார் அந்த காவலாளி.

உலகே இந்த கொடூர தொற்றுநோய்க்கு பயந்து ஒளிந்து கொண்டு இருக்கின்ற இந்த வேளையிலே சிறுவனின் பரிதவிப்பை உணர்ந்து கொண்டு விரைந்து சென்று உதவிய இந்த செயல் பாராட்டத்தக்கது.

Add new comment

5 + 8 =