ஒரு பழக்கம் ஒரு வழக்கம்

ஒரு பழக்கமும் ஒரு வழக்கமும் ஒரு மனிதனை உருவாக்கும். பழக்கத்தை வழக்கமாக நாம் வைத்துக்கொண்டால் எதையும் கற்றுக்கொள்ளமுடியும், எந்தத் திறமையையும் வளர்த்துக்கொள்ளலாம். நீங்கள் பாடகராகவும், பேச்சாளராகவும், எழுத்தாளர்களாகவும் உருவாகவேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் பயிற்சிசெய்யுங்கள், அந்த பயிற்சி பழக்கமாகக் கொண்டு அதை வழக்கமாக்குங்கள் நீங்கள்தான் சாதனையாளர்கள்.

கடவுள் ஒவ்வொருவரிலும் ஒரு மபெரும் சக்தியை வைத்திருக்கிறான். நாம் அதற்காக நல்ல பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். நம்முடைய நல்ல பழக்கம், நம்மை உருவாக்கும். இந்த உலகில் உங்களை மபெரும் மன்னர்களாக உருவாக்கும். 

இன்று உலகின் தலைசிறந்த தலைவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் நல்ல பழக்கத்தை வைத்துள்ளார்கள். நாமும் நல்ல பழக்கத்தை வளர்க்க வேண்டும். அதனை நல்ல நெறிமுறைகொண்டு அந்த பழக்கத்;தை உருவாக்கிக் கொள்ளவேண்டும். அந்த பழக்கம் நமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக வேண்டும்.

நல்ல பழக்க வழக்கங்களின் தொகுப்புதான் சமூகத்தின் பண்பாடாகிறது. வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புகிறவர்கள் நல்ல பழக்கத்தைக்கொள்ளவேண்டும். 

தொடர்பில் கொடுக்கப்பட்ட காணொளிக்காட்சியின் சுருக்கம்.

தொடர்ந்து இந்த செய்தியைப் பார்க்க எங்கள் சேனலுக்கும், இணையதளத்துக்கும் வாங்க - #Veritastamil #rvapastoralcare

Add new comment

11 + 0 =