ஆங் சான் சூச்சியின் கௌரவ விருது பறிப்பு


சர்வதேச மன்னிப்பு சபை மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு அளித்திருந்த கௌரவ விருதை திரும்பபெற்றுள்ளது.  

 

ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான அநீதியை தட்டிக்கேட்க தவறியதற்காக இந்த விருது பறிப்பு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.

 

மியான்மரில் சிறுபான்மையினராக வாழும் ரோஹிஞ்சா முஸ்லிம்களுகு்கு எதிராக கடந்த ஆண்டு மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.

 

மியான்மர் ராணுவம் முஸ்லிம்கள் மீது நடத்திய தொடர் தாக்குதலில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர்.

 

7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வங்கதேசத்திலும், இந்தியாவிலும் தஞ்சமடைந்தனர்.

 

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 73 வயதான நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சி இநத அநீதியை தட்டிக்கேட்காதது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதன் காரணமாக ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை கனடா அரசு அக்டோபர் மாதம் ரத்து செய்தது.

 

மேலும், சர்வதேச மன்னிப்பு சபை, சூச்சிக்கு அளிக்கப்பட்ட ‘மனசாட்சி தூதர் விருது’ என்னும் கௌரவத்தை பறித்துள்ளது.

Add new comment

9 + 5 =