பிலிப்பைன்ஸின் கிறிஸ்துபிறப்புக் கால பாரம்பரியம் புகழாரம் சூட்டும் திருத்தந்தை


Philippino Tradition

கிறிஸ்து பிறப்பு விழாவை மிகுந்த சிறப்புடன் கொண்டாடுபவர்களில் பிலிப்பைன்ஸ் நாட்டினரும் குறிப்பிடதக்கவர்கள். அவர்கள் 9 நாட்கள் நவநாள்கள் தொடங்கி, தங்களைத் தயாரித்து கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறார்கள். 

உரோமை நகரில் புலம்பெயர்ந்த பிலிப்பைன்ஸ் மக்களுக்கு 9 நாட்கள் நவநாள் வழிபாட்டை திருத்தந்தை அவர்கள் தொடங்கிவைத்தார்கள். கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு 9 நாட்கள் முன்பே வழிபாடு தொடங்கும் பழக்கத்தை பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் தாங்கள் வாழும் அனைத்து நாடுகளுக்கும் எடுத்துச் செல்வதைக் குறித்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

அப்பொழுது மீட்பு என்பது அனைவருக்கும் வழங்கப்படுகிறது என்றாலும், ஏழைகள், புறம் தள்ளப்பட்டவர்கள், பின்தள்ளப்பட்டவர்கள்மீது இறைவன் சிறப்பான கவனம் செலுத்துகிறார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 

மனிதனாகப் பிறந்து நம்மோடு வாழ்ந்து அரும்பெரும் அடையாளங்கள் செய்யும் இறைவனின் கருணைநிறை அன்பின் கருவியாக நாம் செயல்பட்டு, வறியோரிடம் நாம் செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார்.

அதே வேளையில் நம்முடைய ஆன்மீக, கலாச்சார அனுபவத்தை பிறருக்கு எடுத்துச் செல்லவேண்டும், பிறருடைய அனுபவங்களையும் ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார்.

நன்றி: வத்திக்கான் செய்திகள்

Add new comment

7 + 4 =