வத்திக்கான்-சீனா ஒப்பந்தத்தை விமர்சிக்கும் ஆங்கில கத்தோலிக்கர்கள்


சீனாவோடு வத்திக்கான் மேற்கொண்டுள்ள ஆயர்கள் நியமனம் தொடர்பான ஒப்பந்தம் பற்றி இங்கிலாந்தின் நீணடகால நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட ஆங்கில கத்தோலிக்க குழுவினர் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.

 

சீனாவில் அதிகரித்து வருகின்ற அடக்குமுறைகளுக்கு மத்தியில், கடவுளை நம்பாத சீன கம்யூனிச அரசுக்கு ஆயர்களை தேர்வு செய்வதில் வத்திக்கான் ஒரு பங்கை அளித்துள்ளதை இவர்கள் விமர்சித்துள்ளனர்.

 

முன்னாள் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கேத்தி சின்னோட் மற்றும் பேராசிரியர் டேவிட் படன் என்பவரோடு பிற்போக்குவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸூம் இணைந்து இந்த விமர்சனத்தை முன்வைத்து்ளளார்.

 

கடந்த ஆண்டு ஆயர்கள் குவோ மற்றும் ஷாவ் என குறிப்பிட்ட முன்னிலை கத்தோலிக்க மத குருக்களை சீன அதிகாரிகள் தொடர்ந்து சித்ரவதைக்கு உள்ளாக்கி, கைது செய்து, அல்லது நிரந்தரமாக பிடித்து வைத்ததோடு, யாரும் அவர்களை தொடர்பு கொள்ள இயலாத வகையில் நடத்தியுள்ளனர் என்று அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

 

வத்திக்கான் சீன ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, 2 மரியன்னை திருத்தலங்களை சீன அரசு அழித்துள்ளது என்றும் இதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

இந்த ஒப்பந்தம் மூலம் கத்தோலிக்க மந்தைகளை ஓநாய்களின் வாயில் திருச்சபை கொடுத்துவிட்டதாக வத்திக்கானை ஹாங்காங் கர்தினால் ஜேசாப் சென் குற்றஞ்சாட்டியுள்ளதாக இவர்கள் அறிக்கையின் முடிவில் தெரிவித்துள்ளனர்.

Add new comment

2 + 6 =