மத சுதந்திரத்தை நாடும் இந்திய கிறிஸ்தவாகள்


பாகுபாட்டையும், வன்முறையையும் நிறுத்துவதற்கு கோரிக்கை ஆவணங்களை முக்கிய அரசியல் கட்சிகளிடம் சட்டிஸ்கார் மாநில கிறிஸ்தவ தலைவர்கள் வழங்கியுள்ளனர்.

 

சட்டிஸ்கார் பல்சமய கிறிஸ்தவ மன்றத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம், இந்தியாவின் மத்தியில் அமைந்துள்ள இந்த மாநிலத்தில் சிறுபான்மையாக இருக்கின்ற கிஸ்தவ சமூகத்தின் பாதுகாப்பு பற்றிய கவலைகளை எழுப்பியது.

 

சட்டிஸ்கார் இப்போது இந்து மத ஆதரவு பாரதிய ஜனதா கட்சியால் ஆளப்பட்டு வருகிறது.

 

அடுத்து வருகின்ற அரசு மத சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த ஆவணம் அழைப்பு விடுக்கிறது.

 

சட்டிஸ்காரில் மொத்தம் வாழும் 250 லட்சம் பேரில் கிறிஸ்தவர்கள் வெறும் 2 சதவீதமே. நவம்பர் 12 மற்றும் 20ம் தேதிகளில் 90 சட்டப்பேரவை தொகுதிக்கு அங்கு தேர்தல் நடைபெறுகிறது.

 

இந்த மாநிலத்தை 15 ஆண்டுகளாக ஆண்டு வருகின்ற பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதை தடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

 

பாஜகவை தவிர எல்லா கட்சிகளும், இந்த மன்றத்தின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Add new comment

4 + 6 =