ஆஸ்திரேலிய கத்தோலிக்க பள்ளிகளுக்கு நிதி ஆதரவு அதிகரிப்பு


கத்தோலிக்க தலைவர்களிடம் இருந்து வந்த கோரிக்கையை தொடர்ந்து ஆஸ்திரேலிய கத்தோலிக்க பள்ளிகளுக்கு அளித்து வரும் நிதி ஆதரவு அதிகரிக்க்பபட்டுள்ளது.

 

ஆனால், பள்ளிகளுக்கு அரசின் நிதி ஆதரவை பாதுகாத்து கொள்ளும் திரு்சசபையின் தந்திரத்தை சில ஆஸ்திரேலியர்கள் விமர்சித்துள்ளனர்.

 

பள்ளிக் கண்டணத்தை பெற்றோர் செலுத்துகின்ற திறனை அளவிடுவதற்கான விமுறைகளில் மாற்றங்களை ஆஸ்திரேலியாவின் சமூக பொருளாதார மீளாய்வு வாரியம் அறிவித்தது.

 

புவியியல் தரவுகளை விட பெற்றோர் செலுத்தி வருகின்ற வரி தகவலை இந்த புதிய வழிமுறை பயன்படுத்தி கொள்ளும்.

 

இந்த புதிய வழிமுறை 2020ம் ஆண்டு முதல் 74 மில்லியன் டாலர் நிதி ஆதரவு உயர்வை கத்தோலிக்க பள்ளிகளுக்கு வழக்க செ்யயும்.

 

அப்போதைய கல்வி அமைச்சர் சிமியோன் பிர்மிங்ஹாம் முன்மொழிந்த சர்ச்சைக்குரைிய 2017 நிதி ஆதரவு மாதிரிக்கு பதிலாக இந்த புதிய மாதிரி செயல்படுத்தப்படும்.

 

இதனால், சிறப்பு ஒப்பந்தங்கள் முடிவு பெற்று அரசு மற்றும் தனியார் என எல்லா பள்ளிக்கூடங்களுக்கும் ஒரே நிதி ஆதரவு அமைப்பு ஏற்படும்.

 

பல பகுதிகளிலுள்ள பள்ளிக்கூடங்களுக்கு நிதி ஆதரவு அதிகாரித்தாலும், ஆஸ்திரேலிய தலைநகர் பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு சுமார் 2 சதவீதம் நிதி ஆதரவு இதனால் குறைகிறது.   

Add new comment

16 + 2 =