ஆசியா பீபி பாகிஸ்தானை விட்டு வெளியேறி விட்டாரா?


பாகிஸ்தானில் உச்ச நீதிமன்றத்தால் அண்மையில் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீபி நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

 

ஆசியா பீபி பாகிஸ்தானை விட்டு வெளியேறி விட்டதாக வெளியான ஊடகத் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள ஆசியா பீபி, 8 ஆண்டுகள் தனிமை சிறையில் தண்டனை அனுபவித்தவர்.

 

தெய்வநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டு விசாரணையில் உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்தது.

 

இந்த தீர்ப்பை எதிர்த்து கடும்போக்கு இஸ்லாமியவாத குழுக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

 

இந்த வழக்கில் ஆசியா பீபிக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் சாய்ஃபுல் மலூக்கிற்கு நெதர்லாந்து தற்காலிக அடைக்கலம் அளித்துள்ளது.

 

எனவே, ஆசியா பீபியும் நெதர்லாந்து சென்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

 

ஆனால், ஆசியா பீபி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்படடிருப்பதாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Add new comment

2 + 0 =