ஊட்டி மக்களுக்காக கடவுளிடம் வேண்டுவோம் 


John Bosco, Ooty

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து வரும் கனமழை காரணமாக நேற்றும் இன்றும் மாவட்டத்தில் மூன்று இடங்களில் 5 பேர் பலி. தொடர்ந்து வரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண் சரிவும் சாலை பழுது அடைந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது இதையடுத்து பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து உயிர் சேதமும் ஏற்பட்டு உள்ளது கடந்த இரு தினங்களுக்கு முன்பு இத்தலார் பகுதியில் வீடு இடிந்து முதியவர் ஒருவர் உயிரிழந்தார். 

இதையடுத்து இன்று நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட இந்திராநகர் பகுதியில் அமுதா (34) மற்றும் காவியா (12)என்ற இருவரும் வீடு இடிந்து விழுந்து பலியாகினர். அதை தொடர்ந்து குருத்துக்குளி பகுதியில் சுசீலா (40) விமலா (42) இரண்டு பேரும் வேறோரு பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர்.

தொடர்ந்து மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த இரண்டு நாட்களில் 5 உயிர்கள் பலியாகி உள்ளன எனவே மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகளும் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

நீலகிரி 08.08.19 
ஜான்பாஸ்கோ

 

Add new comment

3 + 14 =