கலிபோர்னியா மதுவகத்தில் துப்பாக்கிச்சூடு – 13 பேர் பலி


கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்சுக்கு அருகிலிருக்கும் மதுவகத்தில் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

 

29 வயதான துப்பாக்கிதாரி ஒருவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

 

தௌசன்ட் ஓக்ஸ் பகுதியில் இந்த தாக்குதல்தாரியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. .

 

தாக்குதல் நடத்தியவரோடு சேர்த்து மொத்தம் 13 பேர் இறந்துள்ளனர்.  

 

அமெரிக்காவில் இவ்வாறு அதிக மக்கள் துப்பாக்கி தாக்குதலுக்கு இலக்காகி கொல்லப்படுவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

 

 

இரண்டு வாரங்களுக்கு மு்னனர், இரு வேறு சம்பவங்கள் புளோரிடாவிலும், பீட்ஸ்பாக்கிலும் நடைபெற்றுள்ளன.

 

 

இதுவொரு தீவிரவாத தாக்குதலா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Add new comment

16 + 3 =