பாப்பிறை பவுண்டேசனின் தலைவரானார் கர்தினால் ஒ‘மலே


வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்தில் பாஸ்டன் மறைமாவட்ட கர்தினால் சியன் ஒ‘மலே பாப்பிறை பவுண்டேசனின் அறங்காவலர்கள் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

எட்டு ஆண்டுகள் இந்த பதவியில் இருந்து வந்த கர்தினால் டொனால்டு வுரிக்கு அடுத்து கர்தினால் ஒ‘மலே புதிதாக தலைவராகியுள்ளார்.

 

இந்த பவுண்டேசன் குழுவில் 12 ஆண்டுகளாக கர்தினால் ஒ‘மலே இருந்துள்ளார்ர்.

 

இளையோர் பாதுகாப்புக்கான பாப்பிறை கவுன்சில் தலைவராகவும், திருத்தந்தை பிரான்சிஸின் கர்தினால் கவுன்சிலில் உறுப்பினராகவும் கர்தினால் ஒ‘மலே இருந்து வருகிறார்.

 

கத்தோலிக்க புனிதபீடம் பரிந்துரை செய்கின்ற பணித்திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகளுக்கு பிலடெல்பியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாப்பிறை பவுண்டேசன் நிதி வழங்குகிறது.

 

1990ம் ஆண்டிலிருந்து 10 கோடி டாலர் நிதி ஆதரவை கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கியுள்ளது.

 

இந்த பவுண்டேசனின் நிதி உதவியால், உலக அளவில் உதவி பெறாத குடும்பங்கள் மற்றும் தனி நபர்களின் வாழ்க்கையில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறி கர்தினால் ஒ‘மலே இதன் பணிகளை பராட்டியுள்ளார்.  

Add new comment

8 + 7 =