புதிய கல்வி கொள்கையை விமர்ச்சித்த நடிகர் சூர்யா 


simple.wikipedia.org

நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய தேசிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்தார். இதனால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து உள்ளது என்றும் எச்சரித்தார். பஸ் வசதி இல்லாத கிராம மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்படும் என்றும், படிப்பை அவர்கள் பாதியில் நிறுத்திவிடும் நிலைமை இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

அத்துடன் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். கிராமப்புறங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் வசதிகள் குறைவாக உள்ளன. ஆசிரியர் பற்றாக்குறையும் இருக்கிறது. இதனால் கல்வி தரம் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக இல்லை. இதுபோன்ற குறைபாடுகளை களையாமல் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் அரசு கவனம் செலுத்துவதாகவும் கண்டித்தார்.

வெளிநாட்டில் 8-வது வகுப்பு வரை தேர்வுகளே கிடையாது என்பதையும் சுட்டிக்காட்டினார். புதிய கல்வி கொள்கையை எதிர்க்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சமூக அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார். சூர்யா பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்தன.

இந்த நிலையில் சூர்யா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் தரம் மேம்படும் என்றும் வலைத்தளத்தில் சிலர் பேசிவருகிறார்கள். சூர்யாவின் பேச்சுகள் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்று பா.ஜனதா பிரமுகர் எச்.ராஜா கண்டித்துள்ளார்.

அது போல தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, "அரசின் கல்விக்கொள்கையைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு நடிகர் சூர்யா பேச வேண்டும். அரைகுறையாக தெரிந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை." என்று கூறி உள்ளார்.

நிர்வாக மானியம், பள்ளி மானியங்களை அரசு வழங்காததால் தமிழகத்தில் 6,538 அரசு உதவிபெறும் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

மாநிலம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் 5,025 தொடக்கப் பள்ளிகள், 1,513 நடுநிலைப் பள்ளி கள் என 6,538 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் கள், ஆசிரியரல்லாத பணியாளர் களுக்கு அரசு ஊதியம் வழங்கு கிறது. மேலும் இருக்கை, மேஜை, கரும்பலகை போன்ற தளவாடப் பொருட்கள் வாங்கவும், பள்ளிக்கு வெள்ளை அடித்தல், மின் கட்டணம், குடிநீர் ஏற்பாடு போன்றவைக்காக அரசு நிர்வாக மானியத்தை வழங்குகிறது.அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் அடிப்படை ஊதி யத்தில் 2 சதவீதம் நிர்வாக மானியமாக வழங்கப்பட்டு வந்தது.

மேலும் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் மூலமும் பள்ளி மானியமாக தொடக் கப் பள்ளிகளுக்கு ரூ.7 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் 2014-க்கு பிறகு நிர்வாகம் மானியம் வழங்க வில்லை. அதேபோல் 2017-ல் இருந்து பள்ளி மானியத்தையும் நிறுத்திவிட்டனர். இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகள் நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றன.

(நன்றி: பிபிசி நியூஸ்)

Add new comment

7 + 5 =