நாம் தேங்கி நிற்பவர்கள் அல்ல, உயிரோட்டம் உள்ளவர்கள் : திருத்தந்தை 


Pinterest

திருஅவை என்பது, செயலற்று தேங்கிப்போன அமைப்பல்ல, மாறாக, உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்கும் கட்டளையைப் பெற்ற அமைப்பு என்று, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 

இயேசுவைப் பின்பற்ற விரும்பிய மூவர் குறித்து இஞ்ஞாயிறு நற்செய்தி எடுத்துரைப்பது பற்றி தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, தன்னைப் பின்தொடர விரும்பிய முதல் மனிதருக்கு இயேசு வழங்கிய பதிலில், இறைவார்த்தையை எடுத்துரைப்பவர், ஏழ்மையுற்றாலும், அந்நிலையிலேயே தேங்கிவிடாமல், தொடர்ந்து முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றார் என்றார்.

இரண்டாவது மனிதருக்கு, தானே அழைப்பு விடுக்கும் இயேசு, குடும்ப உறவுகளையும் தாண்டி, நற்செய்தி அறிவிப்புக்கு வழங்கவேண்டிய முக்கியத்துவம் குறித்து எடுத்துரைப்பதைக் காண்கிறோம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மூன்றாவது மனிதருக்கு இயேசு வழங்கிய பதில், இயேசுவைப் பின்பற்ற விரும்புகிற ஒவ்வொருவரும் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கவேண்டும் என்பதையும், பின்னோக்கிப் பார்த்து அந்த முடிவுக்காக வருந்தக்கூடாது என்பதையும் காட்டுவதாக உள்ளது என திருத்தந்தை மேலும் எடுத்துரைத்தார்.

பயணித்தல், தயாராக இருத்தல், உறுதியான முடிவெடுத்தல் என்ற மூன்றும், வாழ்வில் நல்லவற்றைச் செய்பவை, இயேசுவைப் பின்பற்றுவதற்கு அத்தியாவசியமானவை என்பதையும் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

(நன்றி : வத்திக்கான் நியூஸ்)

Add new comment

3 + 2 =