அமேசான் மக்கள் நலனில் வத்திக்கான்


vatican news

அமேசான் பகுதி உலக ஆயர் மாமன்றக் கூட்டம் வருகின்ற அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதிவரை  நடைபெற இருக்கின்றது. அதற்கான வழிகாட்டுதல் ஏட்டினை உலக ஆயர் மன்றத்தின் தலைவராகிய கர்தினால் பால்திசேரி அவர்கள் திருப்பீடத் தகவல் தொடர்பு அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து வெளியிட்டார். 

இவ்வேடானது அமேசான் பகுதியிலுள்ள வல்லுனர்களின் உதவியுடனும் மற்றும் வத்திக்கானிலுள்ள வல்லுனர்களின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்:
1.    அமேசான் பகுதி மக்கள் பல்வேறு வழிகளில் சுரண்டப்படுவதிலிரந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள், அவர்களின் நலவாழ்வை ஊக்குவிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கும்.
2.    இப் பழங்குடிமக்களைத் தனிமைப்படுத்தி வைத்திருப்பது, குடிபெயர்தல், நகர்மயமாக்குதல், குடும்பத்தைப் பாதிக்கும் கொள்கைகள், சுரண்டல், ஊழல், ஒன்றிணைந்த நலவாழ்வு, கல்வி, சுற்றுச்சூழல் ஆகியவற்றை ஆயர்கள் மத்தியில் விவாதத்திற்கு கொண்டுவரும்.

எனவே இந்த மாமன்றம் அமேசான் பகுதி மக்களின் வாழ்வை நலவாழ்வாக்கும் என்பதில் ஐயமில்லை.
 

Add new comment

13 + 1 =