Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சின்னச் சின்ன ஆசை… சிகரம் தொடும் ஆசை… சாம் பெர்ன்ஸ்
2014-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் வெள்ளிக்கிழமை பலருக்கும் அதிர்ச்சியூட்டும் செய்தி காத்திருந்தது. 17 வயது நிரம்பிய சாம் பெர்ன்ஸ் என்ற இளைஞன்-முதியவர் காலமானார். என்ன குழுப்பமாக இருக்கிறதா? ஆம் முதிரா முதுமை (Progeria) என்னும் நோயினால் பாதிக்கப்பட்ட இவர் உலகை தன்வயப்படுத்திவிட்டு காலமானார்.
23 அக்டோபர் 1996-இல் அமெரிக்காவில் பிராவிடன்ஸ் நகரில் ஸ்காட் பெர்ன்ஸ் மற்றும் லெஸ்லி கோர்டன் என்னும் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு மகனாகப் பிறந்தார். பிறந்த 22 மாதத்தில் குழந்தைக்கு இந்த நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். வழக்கமாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 13 ஆண்டுகளில் இறந்துவிடுவார்கள். இவர்தான் முதன் முதலில் 17 ஆண்டுகள் உலகத்தை தன் வயப்படுத்தும் அளவிற்கு வாழ்ந்து சென்றிருக்கிறார்.
தன்னுடைய பள்ளிப்படிப்பை போக்ஸ்பர் என்னும் இடத்தில் பயின்றார். பேன்ட் வாசிப்பதில் திறமைப் பெற்று அதற்கான பதக்கங்களைப் பெற்றிருக்கின்றார். தன்னுடைய படிப்பிலும், மற்றவர்களுடன் பழகுவதிலும் உலகிற்கு புதியன ஒன்று விட்டுவிட்டுச் செல்லவேண்டும் என்பதில் அவர் தெளிவாகச் செயல்பட்டார். மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (MIT) சேர்ந்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவேண்டும் என்று கனவுக்காக தன்னைத் தயாரித்து பயணித்தார். அவரால் உந்தப் பட்ட பல இளைஞர்கள் அவரைப் போல பயணிக்கிறார்கள். இந்த நோயின் தன்னைப் பற்றியும் அதற்கான மருந்துகளையும் கண்டறியும் ஆராய்ச்சியில் இவருடைய பெற்றோர் ஈடுபட்டனர். பாஸ்டன் நகரில் முதிரா முதுமை ஆராய்ச்சி அறக்கட்டளையை (Progeria Research Foundation) நிறுவினர்.
இவருடைய வாழ்வினால் பலரும் வாழ்கின்றார்கள் என்பதை அறிந்த HBO நிறுவனம் இவரை வைத்து ஆவணப் படம் ஒன்றைத் தயாரித்தது: Life according to Sam. .
உங்களைப் பற்றி இந்த உலக மக்கள் பெறவேண்டிய மிக முக்கியமான செய்தி என்னவென்று அவரிடம் கேட்டபோது, அவர் சொன்னார்:
நான் மிகவும் மகிழ்ச்சியான வாழ்வு வாழ்கிறேன் (That I have a very happy life).
நான் இப்படி இருக்கின்றேனே என்று சிந்தித்து என்னுடைய சக்திகளை நான் விரையம் செய்வதில்லை. நான் விரும்புகின்ற மனிதர்களோடு இருக்கின்றேன். புதியவன நோக்கி தொடர்ந்து பயணிக்கின்றேன் என்கிறார்.
உங்களால் கடைசியாக எதை மாற்ற முடியாதோ அதை நினைத்துக் கவலைகொள்ள வேண்டாம். ஏனென்றால் உங்கள் செய்ய முடிந்தது மாற்றமுடிந்தது உலகில் ஏராளமாக உள்ளன.
யாருடன் இருக்க விரும்புகிறீர்களோ அவர்களுடன் இருங்கள்.
தொடர்ந்து முன்னேறிச் சென்றுகொண்டே இருங்கள்.
நீங்கள் உதவக்கூடிய எந்த நிகழ்வாக இருந்தாலும் அதை விட்டுவிடாதீர்கள்.
இவருடைய வாழ்வு குறைந்த ஆண்டுகள்தான் என்றாலும் இவர் ஏற்படுத்திய தாக்கம் அளவிடமுடியாது.
நான் என்னவாக விரும்புகிறேனோ, அதுவாக முடியும். நான் உலகினை மாற்றமுடியும் என்று நம்புகிறேன். நான் இந்த உலகயே மாற்ற முயன்றுகொண்டிருக்கும்போது, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய வாழ்வில் சாதிக்க எத்தனையோ தடைகள் வந்தபோது, மற்றவர்கள் எனக்காக பரிதாபப்பட நான் விரும்பவில்லை.
எனக்குள் எழுந்த கேள்வி:
இத்தகைய நெருக்கப்பட்ட நிலையிலும் இவரால் மகிழ்ச்சியோடு பயணிக்க முடிந்தது என்றால்,
தன்னைக் கடந்து உலகுக்கு புதியன கொடுக்க முடிந்தது என்றால்,
இவரைவிட பல்வேறு நிலையில் ஆசிர்வதிக்கப்பட்ட என்னால் ஏன் முடியாது? உங்களால் ஏன் முடியாது.
சிகரம் தொலைவில் இல்லை,
வேரித்தாஸ் தமிழ்ப்பணி
Add new comment