இந்திய விமானப்படை தினம் - அக்டோபர் 08


இந்திய விமானப்படை தினம் - Indian Air Force Day

இந்திய விமானப்படைக்கு மரியாதை செலுத்துவதற்கு ஒவ்வொரு அக்டோபர் 8ம் தேதி, இந்திய விமானப்படை தினமானது கொண்டாடப்படுகிறது, அக்டோபர் 8, 1932 ல் நிறுவப்பட்ட இந்திய விமான படை, தேசத்தின் வெற்றிக்கு வழிவகுத்த பல முக்கிய நிகழ்வுகளின் ஓர் அங்கமாய் இருக்கிறது.

 

இத்தகை வரலாற்றுச் சிறப்புமிக்க விமானப்படை தனது தேசத்தைக் காக்க போர்கள், போர்க்களத்தில் வலிமையான மற்றும்  தேவையான சக்தியாக விளங்குகி இந்தியாவின் பெயரை உலக அரங்கில் உயர்திவுள்ளது.  இந்தியா விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல ஆண்டுகள் பாடுபட்ட விமானப் படை வீரர்களை கவுரவிக்க நடுவண் அரசு இந்த நாளை சிறப்பாக கொண்டாடுகிறது. 

 

இந்திய விமானப்படை  நிறுவப்பட்டபோது, ​​ஆறு RAF பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் 19 விமானப் படைவீரர்களைக் கொண்டிருந்தது.  1941, இந்தியாவில் RAF (ROYAL AIR FORCE) பறக்கும் பயிற்றுனர்கள் தன்னார்வலர்கள் மற்றும் ஆர்வமுள்ள நபர்களுக்கு பயிற்சி அளிக்க பறக்கும் கிளப்புகளுக்கு நியமிக்கப்பட்டனர். பிரிட்டிஷ் இந்தியாவில் ஏழு கிளப்புகளிலும், பல்வேறு சமஸ்தானங்களில் இரண்டு கிளப்புகளிலும் பயிற்சி வழங்கப்பட்டது. இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் 1939ல் சாட்ஃபீல்ட் Chatfield  கமிட்டியால் மறுமதிப்பீடு செய்யப்பட்டு பல வருட பயிற்சி மற்றும் அரசாங்காதின் கூடுதல் கவனம், படைப்பிரிவுகள் முதலியன இந்திய விமான படையை உலகின் தலை சிறந்த பறக்கும் வீரர்களாக உருகொடுத்தது. இந்த சிறப்புமிக்க நாள் ஹிண்டன் படை தளத்தில் கொண்டாடப்படுகிறது

Add new comment

9 + 2 =