உலக ஆடியோ காட்சி பாரம்பரிய தினம் | அக்டோபர் 27 | Veritas Tamil


உலக ஆடியோ காட்சி பாரம்பரிய தினம்

ஒலியும் ஒளியும் மனித வாழ்க்கையில் இன்றியமையா சிறப்பை பெற்றுள்ளது. ஆதி மனிதர் ஒளியை கொண்டு வாழ்வியலையும் ஒலியை கொண்டு தகவல் பரிமாற்றத்தையும் செய்துகொண்டான். எனவே ஒலியும் ஒளியும் பாரம்பரியத்திற்கான முதல் உலக தினம் 2005ல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) ஆடியோவிஷுவல் ஆர்க்கிவ்ஸ் அசோசியேஷன்ஸ் (CCAAA) ஒருங்கிணைப்பு கவுன்சிலுடன் இணைந்து அக்டோபர் 27 அன்று கொண்டாடப்பட்டது.

 

Coordinating Council of Audiovisual Archives Associations (CCAAA) என்பது ஒரு உலகளாவிய அமைப்பாகும். இது பல ஒலி ஒளி நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் "நகரும் படங்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பதற்கான பரிந்துரை"க்குப் பிறகு CCAAA ஆனது அவசரகால அடிப்படையில் கோப்புக்களை பாதுகாக்க நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் ஒன்றிணைந்து செயல்படுமாறு ஓர் பரிந்துரையை வலியுறுத்தியது. இதன் விளைவாக ஆடியோவிஷுவல் ரெக்கார்டுகள் பராமரிக்க  சர்வதேச நூலக சங்க நிறுவனங்களின் கூட்டமைப்பு (IFLA) மற்றும் காப்பகங்களுக்கான சர்வதேச கவுன்சில் (ICA) போன்ற பல அமைப்புகள் வட்டமேஜை கூட்டத்திற்கு ஒன்று கூடின.

 

சில ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டுத் தொழில்நுட்பக் கருத்தரங்கம் (JTS) நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், ஒரு சில ஆண்டுகளுக்குள், சம்பந்தப்பட்ட காப்பக சங்கங்கள் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தன. இதனால் CCAAA பிறந்தது. அவை பதிவுசெய்யப்பட்ட பொருட்களின் தன்மை காரணமாக, சரியாகப் பாதுகாக்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும் இருந்தால், ஒலியும் ஒளியும் ஆதாரங்கள் மோசமடைய 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடந்தால், நம்மைச் சுற்றியுள்ள முக்கியமான மொழி, சமூக, கலாச்சார வரலாறுகளை இழந்துவிடுவோம். யுனெஸ்கோ இந்த நாளின் பின்வரும் நன்மைகளை “பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல்; பாரம்பரியத்தின் குறிப்பிட்ட உள்ளூர், தேசிய அல்லது சர்வதேச அம்சங்களை கொண்டாட வாய்ப்புகளை வழங்குதல்; காப்பகங்களின் அணுகலை முன்னிலைப்படுத்துதல்; பாரம்பரிய பிரச்சினைகளுக்கு ஊடக கவனத்தை ஈர்ப்பது; ஒலியும் ஒளியும் பாரம்பரியத்தின் கலாச்சார நிலையை உயர்த்துதல் போன்ற கருத்துகள் இந்நாளின் முக்கிய அம்சங்களாய் உள்ளன.

Add new comment

9 + 3 =