இந்திய அரசியல் அமைப்பில் என் களம் எங்கே ? - TNCRI


TNCRI - 2022

TNCRI என அறியப்படும் இந்திய துறவறத்தார் மாநாட்டின் தமிழக இணை நிறுவனம் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள சபைத் தலைவர்கள், தலைவிகள், மாநிலத் தலைவர்கள், தலைவிகளுக்கு நடத்தும் மாநாட்டில் இந்திய அரசியல் அமைப்பில் தங்களது களம் எங்கே? எப்படி என்ற தலைப்பில் கலந்துரையாடப்பட்டது.

TNCRI தக்க கால இடைவெளியில் துறவற வாழ்வின் உருவாக்கம், பயிற்சி, சமூகப்பணி, சமுதாயசேவை, ஆற்றுப்படுத்தல், நிர்வாகம், நுண்கலை அறிவு என பலதரப்பில் கத்தோலிக்க துறவியருக்கு பயிற்சியும் வழிகாட்டுதலும் தருகிறது. TNCRI ஆண்டுதோறும் இவற்றை செய்கிறது.

அதன் ஒரு அங்கமாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 5,6 ம் தேதிகளில் திண்டிவனத்தில் உள்ள TNBLCயில் சபைத் தலைவர்களுக்கும் தலைவியருக்கும் மாநிலத் தலைவர்களுக்கும் தலைவியருக்கும் மாநாடு நடத்தப்பட்டது. 

இந்த மாநாட்டிற்கு தமிழக சட்டமன்ற உறுப்பினரும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிறுவனருமான திரு. இனிகோ அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இந்த மாநாட்டிற்கு 'இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் விவிலிய பண்புகளும்' என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது. இதில் பேசிய சிறப்பு விருந்தினர் அரசியல் அமைப்புச் சட்டத்தில் களம் காணாதவர் தனக்கென யாரும் குரல் கொடுக்காத அரசியல் சமூக அனைதையாவர் என்று அண்ணல் அம்பேத்கர் கூறியதை மேற்கோள் காட்டி தற்போதைய சூழலில் அரசியல் அமைப்பில் களம் காணாவிடில் நாம் எவ்வாறு தொலைந்துபோவோம் தொலைக்கப்படுவோம் என்று விவரித்து உரையாற்றி இந்திய விடுதலைக்கு பணியாற்றிய கிறிஸ்தவ குருமார்கள் துறவற சகோதரிகள் கிறிஸ்தவ மக்கள் இவர்களை பற்றி மேற்கோளும் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து நெறியாளர் சகோ. ரவி வேளாங்கண்ணி அரங்கத்தை நோக்கி கேட்டபோது அருள்சகோதரி பிலோமினா FBS சபைத் தலைவி, களம் காணுவது அவசியம் என்றும் இப்போது அவர் சந்திக்கும் சில சவால்களை சொல்லியும் இந்த அரசியல் அமைப்பில் களம் காணுவது எவ்வளவு அவசியம் அவசரமாய் செயல்பட வேண்டும் என்றும் பங்கேற்பாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். 

இதற்கான பணிகள் தொடங்கி அரசியல் அமைப்பின் வழி களம் கண்டு தங்களைக் காத்து அதன் வழி திருஅவையையும் காத்திடட்டும்.

Add new comment

14 + 4 =