அர்த்தமுள்ள விதத்தில் நடத்தப்பட்ட முதியோர் தினம் | VeritasTamil


Celebration of World Grandparents Day - 2022

கடந்த ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அனைத்து தாத்தா பாட்டி மற்றும் முதியோர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் இயேசுவின் தாத்தா பாட்டியான புனிதர்கள் சுவக்கின்  மற்றும் அன்னாள் ஆகியோரின் திருவிழாவிற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

இந்த ஆண்டு ஜூலை 24 ம் தேதி அன்று உலக தாத்தா பாட்டி மற்றும் முதியோர்களின் தினம் கொண்டாடப்பட்டது. அன்பின் பணியாளர்கள் சபை குருக்களுடன் இணைந்து புனித அன்னாள் சபையைச் சார்ந்த அருள்சகோதரிகள் பூவிருந்தவல்லி பகுதியைச் சுற்றியுள்ள தொருவோரம் வாழ்வோர்களை அழைத்து  அவர்களுடன் இந்த தினத்தை கொண்டாடினார்கள். அந்த 17 பேருடன் இணைந்து தொன் குவனெல்லா சிறப்பு பள்ளியின் விடுதியில் இருக்கும் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டுப்போட்டிகளும் நடத்தப்பட்டன. அதில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

இதில் கலந்துகொண்ட கொய்யாப்பழம் விற்கும் மூதாட்டி ஒருவர், தான் எல்லா போட்டிகளிலும் வெற்றிபெறும் ஊக்கத்தை இந்த நாள் தமக்கு தந்ததாக கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து அனைவர்க்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அனைவரும் ஒன்றாய் அமர்ந்து சமத்துவ உணவை உண்டது கூட்டு ஒருங்கியத் திருஅவையின் எடுத்துக்காட்டாய் விளங்கியது.

Add new comment

1 + 4 =