Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சர்வதேச ஜனநாயக தினம் | Veritastamil
சர்வதேச ஜனநாயக தினம் - செப்டம்பர் 15
நாம் ஜனநாயகத்தை ஒரு பொருட்டாக கருதுவதில்லை, ஆனால் சுதந்திரமும் ஜனநாயகமும் இல்லாத வாழ்க்கை கற்பனை செய்து பார்க்க முடியாதது. நமது அரசாங்கங்களில் வளர்ச்சி ஏற்படுத்தியவர்களுக்கு நன்றி தெரிவிக்க சர்வதேச ஜனநாயக தினம் செப்டம்பர் 15 கொண்டாடப்படுகிறது.
2007ல் ஐக்கிய நாடுகளின் (UN) கூட்டாமைப்பு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 சர்வதேச ஜனநாயக தினமாக அனுசரிக்கப்பட்டு ஐநா கூட்டாமைப்பின் அனைத்து உறுப்பு நாடுககளும் ஜனநாயகத்தைப் பேணுவதில் அரசாங்கத்தின் பங்கை ஊக்குவிக்கிறது. சிறப்பாக ஜனநாயகம் அளிக்கும் மதிப்பிணை கொண்டாடுவதிலும், மக்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை வழங்குவதே இந்த நாளுக்கான குறிக்கோள்.
உலகெங்கிலும் உள்ள ஜனநாயகளுக்காக வாதிடும் ஐ.நா., தேர்தல்களைக் கண்காணிப்பது, ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் பொறுப்புகளை வலுப்படுத்துவது, மற்றும் மோதலிலிருந்து மீண்டு வரும் நாடுகள் தங்கள் சொந்த அரசியலமைப்பு சட்டங்கள் உருவாக்க உதவுவது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக சேவை செய்கிறது.
பண்டைய கிரேக்கத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஜனநாயகம் பிறந்தது முதல் இன்று வரை, ஒரு ஜனநாயக நாட்டின் அடித்தளம் அதன் மக்கள், அவர்கள் தங்கள் தேசத்தின் முடிவெடுக்கும் செயல்பாட்டில் பங்கேற்பதே. இனம், பாலினம் அல்லது பிற காரணங்களை பொருட்படுத்தாமல் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படும் போதும் மக்கள் தங்கள் சொந்த சுதந்தித்தை பற்றி சிந்தித்து, நாட்டின் தற்போதைய ஜனநாயக நிலையைக் கருத்தில் கொள்ளும்போதும் மட்டுமே உண்மையான ஜனநாயகம் மலர்கிறது.
நமது சொந்த நாட்டின் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் வாய்ப்புகளைத் தேடுவோம்..
Add new comment