Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயற்கைத் தாயே! | Rosammal
இயற்கைத் தாயே! இந்த உலகிலேயே நன்மை மட்டுமே செய்து கொண்டிருக்கும் அற்புதத்தாய் நீ! ஜுன் 5 ஆம் நாளை ஒவ்வோர் ஆண்டும் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில் நமது மனித வாழ்வு இயற்கையோடு எவ்வாறெல்லாம் பின்னிப் பிணைந்து இருக்கிறது என்று நாம் சிந்தித்துப் பார்த்து இயற்கையைப் பாதுகாக்க முடிவெடுப்போம்.
இயற்கையைக் கொடையாகத் தந்த இறைவனை வாழ்த்துவோம். இறைவனின் வள்ளல் தன்மையை இயற்கையில் பார்த்துப் பாராட்டவும், இயற்கையால் வாழ்வு பெறுகின்ற நாம் படைப்பின் நாயகனுக்கு நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளோம்.
படைப்பு
நாம் பார்த்து ரசிக்கும் இந்த இயற்கையின் அமைப்பும், அழகும் இறைவனால் படைக்கப்பட்டது. இப்படைப்பே இறைவனின் வெளிப்பாடாகும். இவ்வெளிபாட்டில் இறைவன் என்றுமே இருப்பவராக உள்ளார் என்பதற்கு இயற்கையே சான்று பகர்கின்றது. இயற்கையைப் பாராட்டும் இயேசு, இயற்கையின் எழிலை ரசிப்பதோடு (மத் 6:28-29), அந்த இயற்கையை அழகு செய்து பராமரிக்கும் இறைவன் மீது நாம் நம்பிக்கை கொண்டு வாழ நம்மை அழைக்கிறார் (மத் 6:33). ஆக, இறைவனுக்கும் இயற்கைக்கும், இயற்கைக்கும்-இறைவனுக்கும் உள்ள உறவும், மனிதனுக்கும் - இயற்கைக்கும், இயற்கைக்கும் - மனிதனுக்கும் உள்ள உறவும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாமல் இணைந்திருப்பதி இங்கு உணர முடிகிறது.
பொறுப்பு
'படைத்தார்! படைப்பெல்லாம் மனுவுக்காக மனுவைப் படைத்தார் இறைவன் தனை வணங்க' என்பார்கள். இயற்கையைப் படைத்த பின்பு இயற்கை அனைத்தையும் மனிதரிடம் கடவுள் ஒப்படைத்து அதனைப் பேணிக் காத்திடும் பணியை அவர்களிடம் ஒப்படைத்தார் (தொநூ 1:26). இறைவனை வணங்கு தலும், அவருடைய அன்புக் கட்டளைகளில் கருத் தூன்றி வாழ்வதும் இறையருள்தான். பிறர் அன்புக் கட்டளையில் இயற்கையை அன்பு செய்தல் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
உதாரணமாக ஒரு கிராமத்திற்கோ அல்லது ஒரு நகரத்திற்கோ வரும் குடிதண்ணீரை யாரேனும் கழிவுகளைக் கொட்டி மாசுபடுத்தினால் அது
தண்ணீரை அசுத்தப்படுத்துவது மட்டுமல்ல அத்தண்ணீரைப் பருகி வாழும் நூற்றுக்கணக்கான சகோதர, சகோதரிகள் நோய்வாய்ப்பட்டு அவதியுறுவதற்கும் அவர்கள் காரணமாக இருப்பதால் பிறரன்புக் கட்டளைக்கு எதிராகச் செயல்படுகின்றனர். இவ்வாறுதான் பாவம் உலகில் நுழைந்து உலகை மாசுபடுத்துகிறது. மனிதரான நம்மையும் மடியச் செய்கிறது.
பாவம்: இயற்கைக்கு எதிரான அனைத்தும் பாவமாகவே இருக்கின்றன. இத்தகையப் பாவங்கள் தனிமனிதப் பாவமாகவும், வரலாற்றுப் பாவமாகவும் சமூகப் பாவமாகவும், அமைப்புப் பாவமாகவும் இருக்கின்றன. இப்பாவங்களிலிருந்து நம்மையும் இயற்கையையும் காக்க இறைவன் ஒருவரால்தான் முடியும். ஏனெனில் இன்றும் என்றும் கடவுளே நம் மீட்பர்.
வேறுபாடுகள்: ஆன்மீகவாதிகள் படைத்தவரை முதலில் பார்க்கிறார்கள். அவரது படைப்புக்களின் நேர்த்தியையும், ஒருங்கையும், அழகையும் பார்த்து வியக்கிறார்கள் படைப்பின் (இயற்கையின்) நேர்த்தியில் இறைவனைக் கண்டு மகிழ்கிறார்கள்.
அறிவியல் அறிஞர்கள் படைப்பை முதலில் பார்க்கிறார்கள். படைப்பின் அழகையும், ஒருங்கையும், இயக்கத்தையும் புரிந்துகொள்ள முயல்கிறார்கள். எல்லா உயிரினங்களும் இயற்கையின் முக்கியமான அங்கங்கள் என்பதைக் கண்டறிந்து வெளிப்படுத்துகிறார்கள். கடவுள் எல்லாம் வல்லவர். நம்மைச் சுற்றி இயங்கி வரும் இயற்கையும், இயற்கை மாற்றங்களும், நம்மைவிட மிகவும் வலிமையானவை அவற்றின் கட்டுப்பாட்டில்தான் நாம் இருக்கின்றோம் என்கிறது அறிவியல்.
கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். அவருக்குத் தொடக்கமும், முடிவும் இல்லை என்கிறது ஆன்மீகம் இயற்கை என்பது பொருள்களாலும், சக்தியினாலும் ஆனது. இயற்கைக்குத் தொடக்கமும், முடிவும் இல்லை என்கிறது அறிவியல். 420 கோடி வருடங்களுக்கு முன்னால் தோன்றிய பேரண்டத்தின் ஒரு மூலையில் உள்ள சூரியக் குடும்பத்தின் ஒரு சிறிய பூமிப் பந்தில் உயிருள்ள சிறு துகள்தான் மனித இனம் என்று அறிவியல் விளக்கம் தருகிறது .கடவுள் அன்பே வடிவானவர். அவர் நம்மை ஒவ்வொரு நொடியும் நம்மைப் பாதுகாக்கிறார் என் கிறது ஆன்மீகம். இயற்கை அன்பாக நம்மைப் பாது காக்கிறது, நமது வாழ்க்கையில் எல்லா தேவை களையும் நிறைவு செய்கிறது. கையில் எல்லா தேவை களையும் நிறைவு செய்கிறது. (எ.கா) தூய காற்று தூய நிலம், தூய நீர், தூய் உணவும் தந்திருக்கிறது என்கிறது அறிவியல், சுடவுளைப் போற்று! மனி தரையும், இயற்கையைப் போற்று இயற்கையைச் சுரண்டாதே. ஏழை எளியவர்களை சுரண்டாதே என்று வழிகாட்டுகிறது அறிவியல்
கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யாதே. கடவுளின் கட்டளைகளை மீறி நடக்காதே அப்படிச் செய்தால் நீ தண்டிக்கப்படுவாய் என்கிறது ஆன்மீகம் மனிதப் பேராசையால், இயற்கைச் சமநிலையைச் - சீரழித்து விடாதே என்று அறிவுபூர்வமாக வழி காட்டுகிறது அறிவியல், இந்த இயற்கை சமன்பாடு சீர்குலைந்து போனால், காடுகள் அழிந்தால், உலக வெப்பம் உயர்ந்தால், கடல் மட்டம் உயர்ந்தால், பனி மலைகள் உருகினால் நீயும் அழிவாய், இயற்கைக்கு எதிராகப் பாவம் செய்யாதே என்கிறது அறிவியல்.
'பதறாதே. அமைதியாய் இரு. இறைவனைத் தேடு, இறைவன் எத்தனை மாட்சியுள்ளவர் என்று புரிந்து கொள்வாய்' என்கிறது ஆன்மீகம். நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கித் தவிக்காதே. நிதானமான வாழ்க்கை முறைகளை விட்டு விலகிப் போகாதே. பேராசைப்படாதே, உடலைப் போற்று, மனித நலத் தைப் போற்று. இயற்கையோடு இசைந்து வாழப்பழகு, என்று வழிகாட்டுகிறது ஆன்மீக அறிவியல்
அன்பே கடவுள்! உன்னை அன்பு செய். உயிர் களையும் அதே அளவு அன்பு செய். இயற்கையை யும் அன்பு செய்' என்கிறது ஆன்மீகம்.
உறவுகள்தாம் வாழ்வின் அடித்தளம். ஒவ்வொரு நாளும் நல்லுறவை வளர்த்துக் கொள். உயிர் களோடும், இயற்கையோடும் நல்லுறவை வளர்த்துக் கொள் என்கிறது உளவியல்
இப்போது சொல்லுங்கள் ஆன்மீகமா? அறிவியலா? இறைவனா? இயற்கையா? இரண்டும் ஒன்றா? வெவ்வேறா? சிந்திப்போம்!
நாமும் இணைந்து பணியாற்றிட இயற்கையைக் காப்போம். போற்றுவோம்! பராமரிப்போம்!
எழுத்து - சகோ. ரோசம்மாள்
இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,
ஆசிரியர்,
இருக்கிறவர் நாமே
[email protected]
என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
Add new comment