Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஆர்செனிகம் ஆல்பம் – 30
வரும்முன் காப்போம் என்ற சொற்றொடருக்கு ஏற்ப கொரோனா நோய் பரவலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகம், ஆர்செனிகம் ஆல்பம் – 30 (ARS ALB - 30) என்ற ஹோமியோபதி மருந்தை பரிந்துரைத்துள்ளது. தமிழக அரசும் இந்த பரிந்துரையை ஏற்று, இந்த மருந்தை பயன்படுத்துவடதற்கான அரசாணையை (G.O.(Ms).No.201) ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி வெளியிட்டது.
அனைத்து தரப்பு மக்களுக்கும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் இந்த மருந்தினை இலவசமாக கொடுக்க வேண்டும் என ஹோமியோபதி மருத்துவரான ஜேசய்யா அன்டோ பூவேந்தன், சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மருந்தை, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தருவதாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
3 நாட்களுக்கு சாப்பிட வேண்டும்:
இந்த மருந்தை 3 நாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என அறிவுறித்தியுள்ளார்கள். மேலும் தேவைப்பட்டால் 1 மாதத்திற்கு பின்னர் இதே முறையில் உட்கொள்ள வேண்டும் என ஹோமியோபதி மருத்துவ குழுவினர் கூறியிருக்கிறார்கள்.
டிமாண்டில் ஆர்செனிகம் ஆல்பம் – 30:
இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்து, சில இடங்களில் டிமாண்டாக உள்ளது. இதனால் இந்த மருந்து 30 ரூபாய்க்கு முதலில் விற்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த மருந்தானது 200 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுகிறது.
Comments
Article of the time
Good one
Add new comment