Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தாமரை மருத்துவம் | Jayaseeli
மே 8 ம் நாள் உலக வெண்தாமரை தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் வெண்தாமரை பற்றிய சில மருத்துவ குணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்!
தாவர விளக்கம்:
வேர்க்கட்டுள்ள கிழங்கிலிருந்து நேராக வளரும் தாவரம், நீர் ஒட்டாத, மெழுகுப்பூச்சு கொண்ட பெரிய உருண்டையான இலைகளை நீர்ப்பரப்பில் பெற்றி ருக்கும். பெரிய பகட்டான மலர்களைக் கொண்டது மலர்கள் வெள்ளை அல்லது சிவப்பு நிறமாகக் காணப் படும். இவை முறையே வெண்தாமரை, செந்தாமரை என்கிற பெயர்களால் வழங்கப்படும்.
ஓட்டமில்லாத நீர் நிலைகளில் மட்டுமே வளர்வது பெரும்பாலும் கோயில் குளங்களில் காணலாம் மலர்கள் வழிபாடு மற்றும் பூசைகளுக்குரியது. பூ விதை, கிழங்கு ஆகியவை அதிகமான மருத்துவ பயன் கொண்டது.
மருத்துப் பயன்கள், மருந்து முறைகள்:
தாமரை மலர் இனிப்பு. துவர்ப்புச் சுவைகளும், சீதத்தன்மையும் கொண்டது. வெப்பத்தைக் குறைக் கும். குளிர்ச்சி உண்டாக்கும். கோழையகற்றும் விதை உடலைப் பலமாக்கும். கிழங்கு உள்ளுறுப்புக்களின் புண்களை ஆற்றும். தாதுப்பலம் பெற ஒரு கிராம் தாமரை விதையை அரைத்து பாலில் கலந்து, காலை, மாலை சாப்பிட்டு வரவேண்டும்
உடல் சூடு குணமாக 10 கிராம் தாமரைப்பூ இதழ்களை ஒரு லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி வடிகட்டி காலை, மாலை சாப்பிட்டு வர வேண்டும். பார்வை மங்கல் குணமாக கிழங்கினை அரைத்து, எலுமிச்சம் பழ அளவு, தினமும் காலையில் பாலில் கரைத்துக் குடித்து வர வேண்டும். வாந்தி, விக்கல் குணமாக விதையைத் தேனுடன் அரைத்து நாக்கில் தடவி வர வேண்டும்.
தாமரை மணப்பாகு :
நிழலில் உலர்த்திய வெண் தாமரை இதழ்கள் ஒரு கிலோ அளவு மூன்று லிட்டர் நீரில் இட்டு ஓரளவு ஊற வைத்து மறுநாள் ஒரு லிட்டர் அளவு காய்ச்சி வடிகட்டி ஒரு கிலோ சர்க்கரை கலந்து, தேன் பதமாக காய்ச்சி வைத்துக் கொண்டு 2 தேக்கரண்டி, சிறிதளவு நீருடன் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். உடல் சூடு, தாகம் ஆகியவை குறையும், கண்கள் குளிர்ச்சியடையும்.
வெண்தாமரை:
வெண்தாமரை மலர்கள் வெண்மையானவை. தாமரையின் அனைத்து மருத்துவக் குணங்களும் இதற்கும் பொருந்தும். காம்புடன் துவர்ப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. விதைகள் சிறுநீர் பெருக்கும். உடல் சூட்டைத் தணிக்கும் தண்டு, இலை ஆகியவை செரியாமை, பேதி, எரிச்சல் காய்ச்சல், நீர் வேட்கை ஆகியவற்றைக் குணமாக் கும்
தாமரை கொட்டையிலிருக்கும் பருப்பு புரதச் சத்து மிகுந்தது. நீடித்துச் சாப்பிட ஆண்மை பெருக்கும். பருப்பைத் தூள் செய்து, பானம் தயாரித்து அருந்தும் பழக்கம் பிலிப்பைன்ஸ் மக்களிடம் உள்ளது. வெண் தாமரை சர்பத் தயாரித்து சாப்பிட இரத்தம் மூலம் சீதபேதி, ஈரல் நோய்கள் குணமாகும். இருமல் கட்டுப்படும் மூளைக்கும் பலம் மகரந்தங்களை உலர்த்தி பாலிட்டுக் குடிக்க பெண் தரும் மலட்டுத்தன்மை குணமாவதாக நம்பப்படுகிறது
இரத்தக் கொதிப்பு கட்டுப்பட வெண்தாமரை இதழ்களை நன்கு உலர்த்தி பொடி செய்து கொண்டு ஒன்றரைத் தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்..
எழுத்து - சகோ. ஜெயசீலி
இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,
ஆசிரியர்,
இருக்கிறவர் நாமே
[email protected]
என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
Add new comment