Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உலக காடுகள் தினம் | March 21 | World Forest Day
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற 16 ஆம் ஐரோப்பியன் விவசாய மாநாட்டில் காடுகளின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு மார்ச் 21ஆம் தேதி காடுகள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 2012 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுசபையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு ஆண்டும மார்ச் மாதம் 21ஆம் தேதி உலக காடுகள் தினம் (World Forest Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. பருவம் தப்பாத காலநிலை பெரும்பாலும் சீராக இருப்பதற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன, விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன, வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துகின்றன, மண் அரிப்பைத் தடுக்கின்றன.
உலக நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன. நிழல், இலை, காய், கனி, மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மனித சமுதாயத்துக்கு பல வழிகளும் தாவரங்கள் நன்மை தருகின்றன. வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50மூ உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன. நம் இந்தியாவில் சுமார் 24மூ காடுகள் மற்றும் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது. சுமார் 2.2 கோடி பேர் வன நிர்வாகத்தில் பங்கேற்றுள்ளார்கள். சுமார் 100 தேசிய பூங்காக்கள், 515 வன விலங்கு சரணாயலங்கள் இருக்கின்றன.
மனிதன் இன்று சந்திக்கின்ற நெருக்கடியான பிரச்சனை புவி வெப்பமடைதலால் ஏற்படும் பல்வேறு அழிவுகள். முக்கியமாக காடுகளை அழிப்பதை நிறுத்துவது மற்றும் புதிதாக அதிக மரங்களை வளர்ப்பது மூலம்தான் புவி வெப்பம் அடைதலை தடுக்க முடியும். வனம் என்பது காட்டு விலங்குகளுக்கு உரியது. அங்குள்ள மரங்களை நாம் வெட்டி விடுவதால் மழை குறைந்துவிடுகிறது. இதனால், விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக நாட்டுக்குள் நுழைந்து விடுகின்றன.
எனவே மரங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் அறிவோம். மரங்கள் தட்பவெப்ப நிலையை தணிக்கும் தன்மை கொண்டது. நகரங்களில் இருக்கும் மரங்கள் காற்று மாசுபாட்டை குறைக்கும். மேலும் இரைச்சல் அதிகமாக இருக்கும் இடங்களில் மரங்கள் இரைச்சலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிக மரங்களை நகரங்களில் நடுவதன் மூலம் பசுமை நகரங்களாக மாற்றலாம். அதிக தண்ணீர் புலக்கத்திற்கும் நிலத்தடி நீரை சுத்திகரிக்கவும் இயலும். இவ்வாறு மரங்களின் முக்கியத்துவத்தை நாம் அடுத்த தலைமுறைக்கு உணர்த்துவதன் மூலமே பூமியை வாழும் இடமாக மாற்ற இயலும்.
Add new comment