Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மாஸ்டர் மைன்டை நம்பிய ஹென்றி போர்டு | Henry Ford
போர்டு கார்கள் என்றால் அதனுடைய சொகுசுக்கு பெயர்போனது. மக்களால் அதிகமாக விரும்பப்படும் அமெரிக்க உருவாக்கக் கார்களில் முதன்மையானவைகளில் ஒன்று. 30 ஜூலை 1863 இல் வில்லியம் மேரி போர்டு இவர்களுக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதிலிருந்து விளையாட்டு பொருட்களை பிரித்து அதனுடைய வேலைசெய்யும் முறையையும் புரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். தன்னுடைய 15 வயதில்; தன்னுடைய தந்தை அவருக்கு பரிசாகக் கொடுத்த கைக்கடிகாரத்தை பிரித்து, மீண்டும் சேர்த்தார். தன்னுடைய அண்டை வீட்டாரின் கைக்கடிகாரத்தையும் பழுதுபார்த்துக் கொடுத்ததால், கடிதம் பழுதுபார்ப்பவர் என்ற பெயரையும் பெற்றார். தன்னுடைய 20 ஆம் வயதில் ஞாயிறு வழிபாட்டில் பங்குகொள்வதற்காக 4 மைல் தூரம் நடந்து செல்வார்.
அவருடைய தாய் இறந்தபின்பு, அவருடைய தந்தை இவரை விவசாயப் பண்னையின் பொறுப்பினை இவரிடம் கொடுத்தார். விவாசயப் பண்மையில் வேலைசெய்வது அவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், விவசாயப் பண்ணையில் இருந்து வேலைசெய்துகொண்டே தன்னுடைய கனவை நிறைவேற்றவதற்கான பணத்தையும் வாய்ப்பினையும் உருவாக்கிக்கொண்டே இருந்தார். கார் உருவாக்கத்தில் அசம்ப்லி லையன் (உருவாக்க வரிசை) முறையை அறிமுகம்செய்து, கார் தயாரிப்பில் மபெரும் புரட்சியை உருவாக்கினார். 1 அக்டோபர் 1908 இல் இவர் உருவாக்கிய மாடல் டி என்ற கார்தான் சாதாரண மக்களும் வாங்கி பயன்படுத்தும் விலையில் முதன்முதலில் வந்தது.
நினைவில் கொள்ளவேண்டியது, போர்டு மோட்டார் கம்பெனியை அவர் தொடங்குவதற்குமுன்னால் 5 முறை மீளமுடியாத தோல்வியைச் சந்தித்தாலும், துணிந்தார், வென்றார். தன்னுடைய வெற்றிபெயல்லாம் தன்னை வழிநடத்தும் ஒரு மறைபொருளான சக்திக்கு உரித்தானது என்றார். நம்முடைய அறிவை நெறிப்படுத்தும், மபெரும் அறிவு (மாஸ்டர் மைன்ட்) இருக்கிறது, அதுவே நம்மை நம்முடைய இலக்கைநோக்கி வழிநடத்துகிறது என்கிறார். நம்முடைய மாஸ்டர் மைன்ட் நம்மிடம் சொல்வதைப் பின்பற்றினால், நாமும் சாதனையாளர்கள்தான்.
வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள்தான். தோற்றுக்கொண்டே வாழ்ந்த இவர்கள்தான் சாதனையாளர்களாகவும் வரலாறுகளாகவும் மாறியிருக்கிறார்கள், மாறுகிறார்கள். தடைகளைத் தகர்தெரிந்தார்கள், வாய்ப்புகள் தவறும்போதும், மறுக்கப்படும்போதும் அவர்கள் வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அவர்களே வாய்ப்புகளாக மாறினார்கள்.
Add new comment