Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மற்றவர்கள் என்னை சரியாக கணக்கிட முடியாது சார்லஸ் டார்வின் | Charles Darwin
ஒரு சாதரண, நடுத்தரமான அறிவுள்ள பையன் என்று என்னுடைய ஆசிரியர்களும், பெற்றோர்களும் கருதினார்கள். ஒரு வேளை அவர்கள் மிகவும் சீக்கிரமாகவே என்னைத் தீர்ப்பிட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன். வாய்ப்புகளுக்கும், காலத்திற்காகவும் காத்திருங்கள். திறமை வெளிப்படும்வரைப் போராடுங்கள் என்று வாழ்ந்து உலகுக்கு எழுதிக்கொடுத்தவர்தான் டார்வின். தன்னுடைய தொடக்கக் காலத்திலேயே மருத்துவப் படிப்பினை கைவிட்டதால் அவரை சோம்பேரி, நடக்காததைக் கனவுகாண்பவன் என்று சொல்லி அவருடைய தந்தை அவரைக் கொடுமைப்படுத்தினார். ஆனால் இவரோ தன்னுடைய பதையில் தெளிவாய் இருந்ததால் பரிணமான கோட்பாட்டின் தந்தையானார்.
13 பிப்ரவரி 1809 இல் பிரிட்டனில் பிறந்தார். உயிரினங்களின் பரிணாமன வளர்ச்சிப் பற்றியும் அதன் பன்முகத்தன்மைப் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்து, வெளியிட்டார். 19 ஆம் நுற்றாண்டில் இவருடைய கொள்கைகள் அபத்;தான புரட்சிகரமான கருத்தாகக் கருதப்பட்டது.
உயிரியியல் துறைக்கு புதிய நுண்ணறிவினைக் கொண்டுவந்தார். இயற்கையான தேர்வு தலைமுறைகளாக தழுவல்களில் விளைகிறது என்ற கோட்பாட்டினைக் கொடுத்தார். தன்னுடைய கோட்பாடுகள் வெளியிடப்படுவதற்காக 20 ஆண்டுகள் காத்திருந்தார். திருமணம் செய்வதை முடிவுசெய்வதற்காக திருமணம் செய்வதனால் வரும் நன்மை தீமைகளைப் பட்டியலிட்டு பின்னர் திருமணம் செய்துகொண்டார்.
இவர் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று சொல்லவில்லை. மனிதனும் குரங்கும் 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரே மூதாதையரின் பண்புகளில் பங்கு கொள்கிறான் என்றார். பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து தன்னுடைய ஆராய்ச்சியை மேற்கொண்டார். 19 ஏப்ரல் 1882 இல் இறந்தார். மாபெரும் மாற்றங்களை உலகில் கொண்டுவரவேண்டுமென்றால், காத்திருக்கவேண்டும் கடினப்பட்டு உழைத்து நம் கருத்தியலுக்காகப் போராடவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தவர் இவர்.
வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள்தான். தோற்றுக்கொண்டே வாழ்ந்த இவர்கள்தான் சாதனையாளர்களாகவும் வரலாறுகளாகவும் மாறியிருக்கிறார்கள், மாறுகிறார்கள். தடைகளைத் தகர்தெரிந்தார்கள், வாய்ப்புகள் தவறும்போதும், மறுக்கப்படும்போதும் அவர்கள் வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அவர்களே வாய்ப்புகளாக மாறினார்கள்.
Add new comment