Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மக்களின் உணர்வுகளோடு உருவாகியவர் அகியோ மொரிட்டா | Sony
சோனி நிறுவனம் நம்முடைய சமூகதொடர்பு வாழ்வில் தொன்றுதொட்டே உறவாடிக் கொண்டிருக்கிறது. இந்த சோனி நிறுவனத்தின் முதல் படைப்பு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அது சமையல் குக்கர். அது பயன்படுத்துவதற்கு சரியாக அமையாததால், அது 100 க்கும் குறைவான எண்ணிக்கையில் விற்பனையானது. இதனால் சோர்ந்துபோகவில்லை, இதோடும் நின்றுவிடவில்லை அதன் நிறுவுனர் அகியோ மொரிட்டோ. புதிய வழியில் சிந்தித்தார். சோனி நிறுவனம் உருவானது.
26 ஜனவரி 1921 இல் ஜப்பான் நாட்டில் ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த இவர். இயற்பியல் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கினார். இயற்பியலில் படித்துத் தேறினார். கடற்படையில் சேர்ந்து இரண்டாம் உலகப்போரின்போது பணியாற்றினார். தன்னுடைய கடற்படை நண்பருடன் சேர்ந்து 1946 இல் 20 ஊழியர்களுடன் தன்னுடைய தந்தையின் பணஉதவியால் டோக்கியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கினார். 1949 இல் காந்த பதிவு நாடாவை உருவாக்கினார்;. 1950 டேப் ரெக்கார்டரை உருவாக்கினார். 1958 இல் சோனி நிறுவனம் என்று தன்னுடைய டோக்கியோ நிறுவனத்தின் பெயரை மாற்றியமைத்தார்.
சோனி என்ற பெயர் சோனஸ் என்ற இலத்தின் வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டது. இதன் அர்த்தம் என்னவென்றால் சவுண்டு, ஒலி. பின்னர் படிப்படியாக ஒலி, ஒளித்தகடுகள், வாக்மேன் என்று ஒவ்வொன்றாக உருவாக்கி, ஒளி ஒலி பரவலாக்க உலகில் நீங்காத இடம் பிடித்துள்ளார்கள். 204 நாடுகளுக்கு மேலாக இந்த நிறுவனம் பரவியுள்ளது. அடிப்படையில் புதுமையை நோக்கிய பயணம், மக்களின் தேவையை உணர்ந்து செயல்;படும் நுண்ணறிவுதான் இவரின் வெற்றி.
வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள்தான். தோற்றுக்கொண்டே வாழ்ந்த இவர்கள்தான் சாதனையாளர்களாகவும் வரலாறுகளாகவும் மாறியிருக்கிறார்கள், மாறுகிறார்கள். தடைகளைத் தகர்தெரிந்தார்கள், வாய்ப்புகள் தவறும்போதும், மறுக்கப்படும்போதும் அவர்கள் வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அவர்களே வாய்ப்புகளாக மாறினார்கள்.
Add new comment