புதியன உலகுக்குக் கொடுப்பதில் சுகம்கண்ட உல்ப்கேங் அமெடியஸ் மொசாட் | wolfgang amadeus mozart


ஆஸ்திரிய இசைக் கலைஞராகிய இவர் ஏறக்குறைய 600 இசை சரங்களை இயற்றினார். இன்று உலகத்திலுள்ள புகழ்பெற்ற இசைகளில் இவர் இயக்கிய இசைகளும் உள்ளது. 27 ஜனவரி 1756 இல் ஆஸ்திரியாவில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு இசை அமைப்பாளராகத் திகழ்ந்ததால், மொசாட் தனது 6 வயதில் இசைக்கருவிகளை பொதுமேடையில் வாசிக்கும் அளவிற்கு வளர்ந்தார். 1769 ஆம் ஆண்டு அவருடைய தந்தை வியன்னாவிற்கு பயணமானபோது இவரையும் அழைத்துச்சென்றார். தன்னுடைய மகன் மொசார்ட்டின் திறமைகள் அனைவருக்கும் தெரியவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். இந்தப் பயணம் மொசார்டின் வாழ்வில் ஒரு மைல்கல். 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பா மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டிருந்தது. அந்த வேளையில் மொசாட்டின் நகரமான சால்ஸ்பர்க் போன்றவை பிரபுக்களின் கைகளில் இருந்தது.

பிரபுக்கள் தங்கள் பொழுதுபோக்குக்காகவும், கேளிக்கைகளுக்காகவும் கலைஞர்களைப் பயன்படுத்தினார்கள். சால்ஸ்பெர்க்கின் இளவரசர் அவையின் இசையமைப்பாளர் பதவியிலிருந்த அவரை திடீரென்று விலக்கினார்கள். அன்றைய பிரபுக்களின் ஆதரவை பெற இயலாமல், அவரால் பெரிய பெயரும் பணமும் சம்பாதிக்க இயலவில்லை. ஆனால் மக்களுக்கு அவருடைய இசையை அமைத்து மீட்டியதில் திருப்தி கண்டார். 5 டிசம்பர் 1791 இல் இறந்தார். வாழ்வில் அவருடைய திறமையை உலகுக்குக் கொடுக்கவேண்டும் என்ற அந்த போராட்டத்தின் விளைவுதான் இன்று இசையென்றால் மொசாட்டை நினைக்காமல் நம்மால் இருக்கமுடியவில்லை.

Add new comment

4 + 6 =