பின்னுக்கு தள்ளப்பட்டபோது திமிரி எழுந்த சொய்சோரோ கோண்டா | Honda


கோண்டா மோட்டர் கம்பெனியை நிறுவியவர். 17 நவம்பர் 1906 இல் ஒரு சாதராண குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தாய் நெசவுத் தொழில் செய்தார். இவருக்கு வழக்கமான கல்விமுறையில் நாட்டம் இல்லாமல் இருந்தது. தந்தை சைக்கிள் கடை வைத்திருந்தார். இவருக்கு மோட்டர் சைக்கிள் மோகம் அதிகமாக இருந்தது, எனவே தன்னுடைய தந்தையின் கடையில் சைக்கிள் மோட்டர் பழுது பார்ப்பதற்கு அவருடைய தந்தைக்கு உதவுவார். எந்த முறையான கல்வியும் இல்லாமல், தன்னுடைய 16 ஆம் வயதில் டோக்கியோவிற்கு சென்று மோட்டர் பழுதுபார்க்கும் நிறுவனங்களில் வேலைக்காக அலைந்தார். பல்வேறு நிலைகளில் தோல்வியைத் தழுவியவர். டொயோட்டா கம்பெனியில் கோண்டா பொறியியளருக்கான நேர்முகத்தேர்வுக்குச் சென்றார். அவரை டொயோட்டா நிறுவனம் நிராகரித்தது. வேலை கிடைக்காமல் அலைந்தார்.  பின்னர் ஒரு நிறுவனத்தில் 6 ஆண்டுகள் வேலைசெய்தார். கம்பெனியில் வேலைசெய்யும் நேரம்தவிர மற்றநேரங்களில் மோட்டர் இயக்கத்தைப் பற்றி படித்து அதை செய்துபார்த்துக்கொண்டே இருந்தார். 
தன்னுடைய 22 ஆம் வயதில் ஊர் திரும்பினார், தன்னுடைய கம்பெனியைத் தொடங்கினார். வீட்டிலிருந்து ஸ்கூட்டர் தயாரிக்க ஆரம்பித்தார். அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அவருக்கு உற்சாகம் தந்தார்கள். தொடக்கத்தில் டெயோட்டா நிறுவனத்திற்கு கார் பாகங்கள் செய்து அனுப்பினார். இரண்டாம் உலகப்போரின்போது, 1945 இல் இவருடைய இவாட்டா பிளாண்ட் நிலைகுலைந்தது. எனவே டொயோட்டா கம்பெனியிடம், அவற்றை விற்றார். பின்னர் 1946 இல் ஹோண்டா டெக்னிக்கல் ரிசர்ஜ் இன்ஸ்டிடுயூட்டினை ஆரம்பித்தார். 1948 இல் கோண்டா மோட்டர் நிறுவனம் உருவானது. டைப் எ என்ற இன்ஜினை உருவாக்கினார். அது 1951வரை அதிகமாக விற்கப்பட்ட இன்ஜசினாக இருந்தது. 1949 இல் டைப் டி என்ற மோட்டர் சைக்கிள் இன்ஜினை உருவாக்கினார். இந்த இரண்டு மாடல் இன்ஜின்களும் ஜப்பானிய வாகனத் தொழில்நுட்பத்தில் முக்கிய இடம்பிடித்தது. தோல்விகள் வந்தாலும் சோர்ந்துபோகவில்லை, ஒரு அடி பின்னுக்கு தள்ளப்பட்டபோது, 100 அடி முன்வைத்து பாய்ந்தார்.

 

வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள்தான். தோற்றுக்கொண்டே வாழ்ந்த இவர்கள்தான் சாதனையாளர்களாகவும் வரலாறுகளாகவும் மாறியிருக்கிறார்கள், மாறுகிறார்கள். தடைகளைத் தகர்தெரிந்தார்கள், வாய்ப்புகள் தவறும்போதும், மறுக்கப்படும்போதும் அவர்கள் வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அவர்களே வாய்ப்புகளாக மாறினார்கள்.

Add new comment

4 + 7 =