கொடுக்கப்பட்ட மூளையை சரியாக பயன்படுத்திய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் | Einstein


குழந்தை பருவத்தில் அவரைப் பார்த்தவர்கள் யாரும் இவருடைய மூளைதான் உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களிலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட மூளை என வியப்பார்கள் என்று நினைத்ததில்லை. அவருடைய ஐ.க்யூ 180 என்று சொல்லப்படுகிறது. சாதரண அறிவாளிகளின் ஐ.க்யூ 100 என்று மதிப்பிடப்படுகிறது.  ஆனால் இவருடைய குழந்தைப் பருவத்தில் இவரைப் பார்த்தவர்கள் ஒரு மனநிலை குறைபாடுள்ளவராக இருப்பாரோ என்றுதான் எண்ணினார்கள். இவருடைய ஆசிரியர்கள் இவரைப் பள்ளியிலிருந்து வெளியேற்றினார்கள். இவருக்கு அக்டமியில் வேலை கிடைப்பதற்கு 9 ஆண்டுகள் ஆகின. அப்படியிருந்த அவர், 1921 இல் நோபல் பரிசு பெறும் அளவிற்கு உயர்ந்தார். இவருக்கு யூதப் பாரம்பரியம் இருந்ததால், 1952 ஆம் ஆண்டு இவரை இஸ்ரயேல் நாட்டின் இரண்டாவது அதிபராக பதவியேற்க அழைப்புவந்தது. ஆனால் ஐன்ஸ்டீன் மறுத்துவிட்டார். 

14 மார்சு 1879 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தார். 1895 இல் ஜெர்மன் நாட்டு குடியுரிமையை விட்டுவிட்டு ஸ்வீடன் நாட்டிற்குச் சென்றார். அங்கு தன்னுடைய படிப்பினைத் தொடர்ந்தார். 1905 தன்னுடைய முனைவர் பட்டத்தைப் பெற்றார். அந்த ஆண்டு நான்கு கோட்பாடுகளை வெளியிட்டார். அதுதான் இயற்பியல் வரலாற்றில் மாற்றித்திற்கு காரணமானது. எனவேதான் 1905 ஆம் ஆண்டினை ஐன்ஸ்டீன் வாழ்வில் அதிசய ஆண்டு (மிரக்கில் இயர்) என்று வர்ணிக்கின்றனர். 1933 ஆம் ஆண்டு அவர் அமெரிக்கா சென்றார். அப்பொழுது ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். அவருடைய கொள்கைகள் இவருக்குப் பிடிக்காததால் ஐன்ஸ்டீன் அமெரிக்காவிலேயே குடியேறினார். 1940 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். அனு ஆயுதம் பயன்படுத்துவதை எதிர்த்தார். அதை ஜெர்மனி நாடு இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தபோவதைப் பற்றி அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு எச்சரித்தார். 

இவருடைய சார்பியல் கொள்கைதான் உலக வளர்ச்சிப்பாதையின் படிக்கலாகத் திகழ்ந்தது. 1955 ஆம் ஆண்டு இறந்தார். அவர் இறந்தபின்பு டாக்டர் தாமஸ் கார்வே அவருடைய குடும்பத்திற்கு தெரியாமல் ஐன்ஸ்டீன் உடலை அறுவை சிகிச்சை செய்து அவருடைய மூளையைத் திருடிவிட்டார். 1980 ஆம் ஆண்டு  குடும்பத்தின் ஒப்புதலோடு அவருடைய மூளையை பல்வேறு ஆராய்ச்சியகங்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அவருடைய மூளையின் ஒரு பகுதியில் (பரியிட்டல் லோப்) மடிப்பு இருப்பதாகவும், அந்த பகுதி கணிதம் மற்றும் இடம்சார்ந்த திறன் அறிவினை வளர்கும் இடம் என்று கனடியன் பல்கலைக் கழகம் 1999 இல் வெளியிட்டது. ஆக இறந்தபின்பும் எப்படிப்பட்ட மூளை என்று திருடி ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு அவருடைய மூளையைப் பயன்படுத்தியிருக்கின்றார். நாமும் நம்முடைய மூளையை சரியாக பயன்படுத்துவோம். வரலாற்றை மாற்றியமைப்போம்.

 

வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள்தான். தோற்றுக்கொண்டே வாழ்ந்த இவர்கள்தான் சாதனையாளர்களாகவும் வரலாறுகளாகவும் மாறியிருக்கிறார்கள், மாறுகிறார்கள். தடைகளைத் தகர்தெரிந்தார்கள், வாய்ப்புகள் தவறும்போதும், மறுக்கப்படும்போதும் அவர்கள் வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அவர்களே வாய்ப்புகளாக மாறினார்கள்.

Add new comment

4 + 11 =