குழுவாக இணைந்தார்கள், உலகை இணைத்தார்கள் த பீட்டல்ஸ் | The Beatles


பீட்டல்ஸ் குழுவின் இசையை அறியதவர்கள் இல்லை. இவர்கள் முதன் முதலில் அரங்கேற்றியபோது யாரும் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் சென்ற இடங்கெல்லாம் இசை பதிவு நிறுவனங்கள் இவர்களை நிராகரித்தார்கள். உங்களுடைய அந்த சத்தமும், கித்தார் இசையும் புதுமையாக இல்லை, அது உங்ககளை வெளியே தள்ளப்படும் சூழ்நிலைக்கு கொண்டு போய்கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள். ஆனால் அன்று நிராகரிக்கப்பட்ட அவர்களின் அந்த இசை சத்தமும், கித்தார் இசையும்தான் உலகையே அவர்கள் வசம் வைத்துக்கொண்டுள்ளது.  
1960 இல் விவர்புலில் ஜான் லெனன், பால் மக்கார்தினி, ஜார்ஜ் ஹேரிசன், ரிங்கோ ஸ்டார் என்ற 4 நபர்கள் கொண்டு இணைந்ததுதான் பீட்டல்ஸ் ராக் இசைக்குழு. கிளாசிக்கல் இசையையும், பாரம்பரிய பாப் இசையையும் புதுமையான முறையில் இணைந்து பாடினார்கள். 1962 இல் அவர்கள் வெளியிட்ட லவ் மி ட்டு என்ற பாடலே அவர்களின் முதல் வெற்றியும் அங்கிகாரமும். 1964 இல் அவர்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்றார்கள். அமெரிக்காவின் பாப் இசையுலகில் நுழைந்தார்கள். இவர்கள் 600 மில்லியன் யூனிட் இசைத்தகடுகள் உலகளவில் விற்றிருக்கிறார்கள். இன்றுவரை அதிகமாக செல்வாக்குப் பெற்ற இசைக்குழுவின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்கள். 1970 இல் அவர்கள் பிரிந்து, தனித்தனியாக பாடல் பாட ஆரம்பித்தார்கள். தி பீட்டல்ஸ் கெட் பேக் என்ற பெயரில் பீட்டர் ஜாக்சன் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். அதை வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் வெளியிட இருக்கிறார்கள்.

வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள்தான். தோற்றுக்கொண்டே வாழ்ந்த இவர்கள்தான் சாதனையாளர்களாகவும் வரலாறுகளாகவும் மாறியிருக்கிறார்கள், மாறுகிறார்கள். தடைகளைத் தகர்தெரிந்தார்கள், வாய்ப்புகள் தவறும்போதும், மறுக்கப்படும்போதும் அவர்கள் வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அவர்களே வாய்ப்புகளாக மாறினார்கள்.
 

Add new comment

10 + 3 =