கருக்கலைப்பு...


hands

கருக்கலைப்பு அனுமதி கொடுக்கப்பட்டாலும், அதனை நிறைவேற்ற மருத்துவர்கள் தயாராயில்லை என்பது மகிழ்ச்சியான காரியம். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள், நலமாயிருக்கும். தென் ஆப்ரிக்காவில் ஜோகன்ஸ்பர்க்கில் கருக்கலைப்பு ஆதரவாளர்கள் கருக்கலைப்பிற்கான மருத்துவமனைகளை பல இடங்களில் நிறுவுவதற்கான முயற்சியைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். ஆனால் மருத்துவர்கள் கருக்கலைப்பு சிகிச்சையைக் கொடுப்பதற்கு தயாராக இல்லாததால் அதனைப் பற்றிய பல விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து வைத்துள்ளார்கள். கருக்கலைப்பினை நியாயப்படுத்த பல காரணங்கள் நாம் கொடுத்தாலும், ஒரு உயிரினை இவ்வுலகிற்கு வருவதற்கான அனுமதி அளிக்கப்படவேண்டும் என்ற நிலையை நாம் மறுக்கமுடியாது. காரணம்,

நல்லா இருக்கின்ற குழந்தை என்று நினைப்பதெல்லாம் உலகில் நல்ல மனிதர்களாக உருவெடுத்ததில்லை. அதே வேளையில் இக் குழந்தைக்கு இவ்வுலகில் வாழ தகுதியில்லை என நாம் நினைக்கும் குழந்தை மாபெரும் மனிதராக வளரலாம்.

உங்கள் கருத்துகளை சரியான காரணங்களுடன் வெளிப்படுத்தினீர்கள் என்றால் நலமாக இருக்கும். உங்கள் பதிவுக்காக காத்திருக்கின்றோம்.
 

Add new comment

10 + 1 =