கனவுகளை பறக்கவிடாததால் விமானத்தில் பறந்தார்கள் | Wright Brothers


ரைட் சகோதரர்கள் (ஒருவில் மற்றும் வில்பர் ரைட்) முதன் முதலில் சைக்கிள் கடைதான் வைத்தார்கள். அதை வைப்பதற்கே அவர்கள் குடும்பத்தில் பிரச்சனைகளும், உடல்நலமின்மையும் தடையாக இருந்தது. ஆனால் அவர்கள் எதாவது புதியன செய்யவேண்டும் என்று முயன்றார்கள். பல ஆண்டுகள் முயன்றார்கள், பல முறை தவறுசெய்து விழுந்தார்கள். ஆனால் அவர்கள் வீழ்ந்துவிடவில்லை. ரைட் சகோதரர்களின் அந்த உறுதியான மனநிலை, இன்று உலகையே ஒரு சிறிய இடமாக மாற்றியிருக்கின்றது. மனிதன் ஆகாயத்தில் பறந்துகொண்டே இருக்கின்றான்.

இவர்கள் இருவரும் அமெரிக்காவில் பிறந்தார்கள். இவர்கள் இருவரின் பெயர்கள் அவர்களின் தந்தைக்கு பிடித்தமான இரு குருவானவர்களின் பெயர்களே. இவர்களின் தந்தை சர்ச் ஆப் யுனைட்டட் ப்ரதரன் இன் கிரைஸட் என்ற சபையின் ஆயராக இருந்ததால், இவர்களை ஆயரின் பிள்ளைகள் என்றே அழைத்தார்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. குழந்தைப் பருவத்தில் இவர்களின் தந்தை வாங்கிக்கொடுத்த பொம்மை கெலிகாப்டர்தான் பிற்காலத்தில் இவர்களுக்கு பறக்கலாம் என்ற ஆசையை தூண்டியது. இவர்கள் நான்கு ஆண்டுகள் படித்தும் டிப்ளோமா பட்டம் பெறமுடியவில்லை. காரணம்; திடீரென்று இவர்கள் குடும்பம் மற்றொரு இடத்திற்கு இடம்பெயர வேண்டியிருந்தது. 

தொடக்கத்தில் அச்சகம் நிறுவினார்கள். பின்னர் 1892 இல் சைக்கள் விற்கும் பழுதுபார்க்கும் கடையைத் தொடங்கினார்கள். 1896 ஆம் ஆண்டு தங்களுடைய சொந்த சைக்கிளை தயாரித்து விற்;றனர். அதிலிருந்து வரும் பணத்தைக்கொண்டு விமானம் தயாரிக்கும் முயற்சியை மேற்கொள்ள விரும்பினார்கள். முயன்றார்கள். பறக்கவிட்டார்கள். பறந்தார்கள். 1903 ஆம் ஆண்டு அவர்கள் பிளையிங் மெசின் என்ற பெயருக்கு காப்புரிமை பெற்றார்கள். 1904 ஆம் ஆண்டு ரைட் பிளையர் மெசின் 2 உருவாக்கினார்கள். 5 மே 1910 குடும்பமாக விமானத்தில் பறந்தார்கள்.; அவர்கள் படிக்கும்போது பெறமுடியாத அந்த டிப்ளமோ பட்டம் 1994 ஆம் ஆண்டு வில்பருக்கு 127 ஆம் பிறந்தநாள் அன்று கொடுக்கப்பட்டது. 

 

வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள்தான். தோற்றுக்கொண்டே வாழ்ந்த இவர்கள்தான் சாதனையாளர்களாகவும் வரலாறுகளாகவும் மாறியிருக்கிறார்கள், மாறுகிறார்கள். தடைகளைத் தகர்தெரிந்தார்கள், வாய்ப்புகள் தவறும்போதும், மறுக்கப்படும்போதும் அவர்கள் வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அவர்களே வாய்ப்புகளாக மாறினார்கள்.

Add new comment

16 + 0 =