Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கடன்கார எம்.பி!
என்னது எம்.பி ஒரு கடன்காரண? ஆமாங்க! கடன்காரன் எம்.பி தான். ஆனால் இங்க இல்லங்க கென்யாவுல. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கென்யாவில் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் எம்.பி. ரிச்சர்ட் டோங்கி, அவுரங்காபாத்தில் உள்ள ஒரு மளிகைக்காரருக்கு கொடுக்கவேண்டிய ரூ. 200 கடனை திருப்பிச் செலுத்துவதற்காக முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளார்.
நயரிபரி சாச்சே தொகுதியைச் சேர்ந்த எம்.பி. ரிச்சர்ட் டோங்கி 1985 முதல் 89 வரை அவுரங்காபாத்தில் உள்ள ஒரு உள்ளூர் கல்லூரியில் மேலாண்மைப் படிப்பு மாணவராக இருந்தார். அவர் தனது தாயகத்திற்குச் சென்றபோது, மளிகை கடை நடத்தி வந்த எஸ்.கே. காவ்லிக்கு ரூ .200 கடன்பட்டிருந்தார்.ரிச்சர்ட் தங்கியிருந்த வான்கடேநகர் பகுதியில் எஸ்.கே. காவ்லி கடை நடத்திவந்துள்ளார்.
கென்யா எம்.பி. கடனை திருப்பிச் செலுத்த வந்தபோது, கவ்லியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. "என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை," என்று அவர் கூறினார். காவ்லியைச் சந்தித்தபோது ரிச்சர்டும் கண்ணீர் விட்டார். அவர், "அவுரங்காபாத்தில் ஒரு மாணவராக இருந்த போதோ எனக்கு இவர் உதவிகளை செய்துஇருக்கிறார். இப்படி தான் நான் இவருக்கு கடன் பட்டிருந்தேன். பின்னர் ஒரு நாள், நான் திரும்பி வந்து கடனை திருப்பி செலுத்துவேன் என்று நினைத்தேன். நன்றி சொல்ல விரும்புகிறேன்.
"கடவுள் காவ்லி மற்றும் அவரது குழந்தைகளையும் ஆசீர்வதிப்பார். அவர்களை சந்தித்ததில் எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. அவர்கள் என்னை உணவுக்காக ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல விரும்பினர், ஆனால் நாங்கள் அவர்களின் வீட்டில் சாப்பிட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்," என்று அவர் கூறினார். புறப்படுவதற்கு முன், கென்ய எம்.பி., காவ்லியை தனது தாயகத்திற்கு வருமாறு அழைத்தார்.
வரவு எட்டணா செலவு பத்தணா என்ற பழமொழிக்குகேற்ப நம்முடைய வாழ்க்கையில் வரவு எவ்வளவு என்பதை நினைத்து பார்த்து செலவு செய்தமானால் நம் வாழ்கை கடனில்லா வாழ்க்கையாகும். கடன் தொல்லையினால் குடும்பத்தை யோ, தனிமனித வாழ்க்கையை யோ பார்த்தால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை,பிள்ளைகளிடம் பிரச்சனை,உறவுகளிடம்,நண்பர்களிடம் பிரச்சனை என்று வாழ்க்கையே பிரச்சனையாக மாறிவிடுகிறது.
கடனில்லாமல் வாழ்வது எப்படி? முதலில் குடும்பத்தில் புரிந்து கொள்ளுதல், விட்டு கொடுக்கும் மனப்பான்மை, அத்தியாவசிய தேவைகளை சந்திக்கும்போது, யோசித்து நமக்கு தேவையானதை மட்டும் வாங்கவேண்டும் என்ற ஒருவருக்கு ஒருவர் மனப்பான்மை கொண்டுவர வேண்டும். குடும்பத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுசேமிப்பு பற்றி சொல்லித்தரவேண்டும். பெற்றோருக்கு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை வீட்டு செலவிலும் மிச்சப்படுத்துதல் மற்றும் சிறுசேமிப்பு மூலமாகவோ அந்த கடனை அடைத்து விட்டால் எவ்வளவு நிம்மதி, சந்தோசம் பெருகும் தெரியுமா?
இந்த சூழ்நிலையில் பெற்றோருக்கு பெரிய மனநிம்மதி, வளந்த பிள்ளைகளுக்கு சமூகத்தில் ஒரு மதிப்பு, குடும்பத்தில் சந்தோசம் வலமாய் இருக்கும். விரலுக்கேற்ற வீக்கம் என்ற பழமொழிக்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையிலும் வருமானத்திற்கு ஏற்ற செலவு செய்தல் வேண்டும். சிறுசேமிப்பு என்ற பழக்கத்தை பயன்படுத்தி கொண்டோம் என்றல் கடன் என்ற சொல்லுக்கு இடம் இல்லாமல் குடும்பத்திலும், சமூகத்திலும் அன்பை வளர்த்து வலமாய் வாழலாம்.
இதை தான் திருவள்ளுவர் அன்றைகே கடனை பற்றி தன் குறளில் கூறியுள்ளார். கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
இதை போல் உங்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை எங்களுக்கு comment பண்ணுங்க.
Add new comment