ஒவ்வொரு துன்பத்திலும் வாழ்வைக் கண்டவர் ஓர்பா வின்ப்ரே


இவரின் வார்த்தைக்கும் வர்ணனைக்கும் அடிமையாகதவர்கள் இல்லை. உலகத்தில் ஒரு பெரிய செல்வந்தராகவும், வெற்றிப் பெண்ணாகவும் வளம்வருகின்றார். ஒவ்வொரு முயற்சியிலும் தோல்விகளைச் சந்தித்தார். ஒரு கருப்பினப் பெண்ணாக பல கஸ்டங்களை அனுபவித்திருக்கிறார். குழந்தைப் பருவத்தில் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றார்.
 

டிவியில் தோன்றுவதற்கு தகுதியில்லாதவர் என்று தள்ளப்பட்டவர், டிவியில் அனைவராலும் விரும்பிப் பார்க்கும் ஒருபெண்ணாக வளம் வந்தார். இன்றும் வருகிறார். அவருடைய தொடர் முயற்சி அவருக்கு ஒரு புதிய வாழ்வை கொடுத்தது, பலருக்கும் வாழ்வாக அமைந்தது.
29 ஜனவரி 1954 இல் அமெரிக்காவில் பிறந்தார். அவருடைய தந்தை வெர்னன் வின்பிரை ஒரு முடிதிருத்துபவர்தான். தொடக்கத்திலிருந்து ஓர்பாவின் வாழ்க்கை அலைமோதியதாகத்தான் இருந்தது. அவர் தன்னுடைய உறவினர், குடும்ப நண்பர் போன்றவர்களால் தனது 9 வயதிலிருந்து தவறாக பயன்படுத்தப்பட்டார். தன்னுடைய 13 ஆம் வயதில் வீட்டை விட்டு ஓடினார். அவருடைய 14 ஆம் வயதில் கருவுற்றார். குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தையும் இறந்தது. தன்னுடைய 24 ஆம் வயதில் இதைப் பற்றி தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்துகொண்டபோது அவர்கள் இவரை நம்பவில்லை. வாழ்வில் எல்லா நிலையிலும் புறந்தள்ளப்பட்ட சூழல் இருந்தபோதும், தனக்குள் இருக்கும் திறமையைத் தேடி வளர்த்ததால், 25 ஆண்டுகளுக்கு மேலாக ஓர்பா வின்பிரே சோவின் மூலம் உலகைத் தன் பக்கம் திருப்பினார். 2021 இல் அவருடைய சொத்தின் மதிப்பு 260 கோடி அமெரிக்க டாலர் என்று சொல்லுகிறார்கள். நீங்கள் முயன்று பாருங்கள்.

Add new comment

2 + 11 =