ஏட்டுக்கல்வி மட்டும் போதுமா? | Arya Rajendran


திருவனந்தபுரத்திலுள்ள ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் கணிதவியல் இளநிலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் இவர், திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக 24 டிசம்பர் 2020 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் கேரளாவில் இளம் வயதில் மேயரானவர் என்ற பெயரைப் பெறுகிறார். இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த சுமன் கோலி என்பவர் 2009 ஆம் ஆண்டு மேயராகி, இந்தியாவின் இளம் மேயர் என்ற பெயரைப் பெறுகிறார். அவருக்கு அடுத்த இளம் வயதில் நம் நாட்டில் மேயரானவர் பட்டியலில் இவர் வளம்வருகிறார்.

இவருடைய தந்தை திரு. ராஜேந்திரன் எலகட்ரிசனாகப் பணியாற்றி வருகிறார். இவருடைய தாய் திருமதி. ஸ்ரீலதா காப்பீட்டு நிறுவனத்தில் முகவராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய சகோதரர் அரவிந்த் பொறியாளராகப் பணிசெய்து வருகிறார். இவருடைய பெற்றோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) உறுப்பினராக இருந்து வருகிறார்கள். தன்னுடைய பெற்றோருடைய ஒத்துழைப்புடன் இவருடைய அரசியல் வாழ்க்கை தனது 5 ஆம் வகுப்பு படிக்கும்போதே ஆரம்பமானது. அவள் பாலசங்கம் என்ற குழந்தைகள் அமைப்பில் சேர்ந்தார். அது கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியுடன் தொடர்புடையதாக இருந்தது. இப்போது அவர் அந்த பாலசங்கத்தின் மாநிலத் தலைவராக இருக்கிறார். தனது கல்லூரிப் படிப்பின் தொடக்கத்திலேயே சிபிஎம் இன் மாணவர்கள் பிரிவான எஸ்எப்ஐ இல் சேர்ந்தார். 

அவர் தன்னுடைய இயல்பிலேயே தலைமைத்துவப் பண்புகளைப் பெற்றிருந்தார். தன்னோடு இருந்தவர்களை உற்சாகப்படுத்தினார், அவர்களோடு ஜனநாயக ரீதியான முறையில் வேலைசெய்தார். மற்றவர்களின் கருத்துகளுக்கு கவனமுடன் செவிசாய்த்தார். 
ஆர்யா ஒரு மனசாட்சியுள்ள, கடினப்பட்டு உழைக்கும் மனப்பலமுடைய, சுய உந்துதல் உள்ள மாணவியாகத் திகழ்ந்தார். சுய ஒழுக்கம் நிறைந்த மாணவியாகத் திகழ்ந்ததால் தன்னுடைய ஆசிரியர்கள், வகுப்பிலுள்ள அனைவரின் நல்மதிப்பினைப் பெற்றிருந்தார். 

மேயர் பதவிக்கு வந்தபின் டீனேச்சர் டுடே பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்த நேர்காணலில் பங்கேற்றார். அப்போது பொது நலனுக்காக அவர் முன்னெடுத்த நிகழ்வுகள், அதனால் விளைந்த வன்முறைகள், மற்ற அரசியல் கட்சிகளின் தலையீடுகள் போன்றவற்றைப் பற்றி பேசினார். பள்ளிப் படிப்பின்போது பலசங்கத்தில் இவருடைய ஈடுபாடு இவருடைய படிப்பிற்கு எப்போதும் தடையாக இருந்ததில்லை என்றார். நம்முடைய படிப்பும், அரசியல் ஈடுபாடும் எப்போதும் கைகோர்த்து செல்லவேண்டும், அதைத்தான் நான் மாணவர்கள் அனைவரிடம் சொல்கிறேன் என்றார். ஏனென்றால் என்னை உருவாக்கியதில், எனக்கு நம்பிக்கையைக் கொடுத்ததில், பிரச்சனைகளை மேற்கொள்ளும் திறமை வளர்த்ததில், என்னுடைய தலைமைப் பண்பினை வெளிகொண்டுவந்ததில்  பாலசங்கத்தின் முழுப் பங்கு உண்டு என்பதை நான் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்கிறார். 

ஆக, மாணவர்களாக உருவாக்கப்படுகிறவர்கள், சமூக அரசியல் அறிவுடனும், ஈடுபாட்டுடனும் தங்களுடைய கல்வியைப் பெற்றுக்கொண்டுவந்தார்கள் என்றால், நாளை இந்தியா வளர்ச்சியின் உச்சிக்குச் செல்லும் என்பதில் எந்த ஐயமுமில்லை. எனவே நம்முடைய குழந்தைகளுக்கு ஏட்டுக்கல்வி மட்டும் கொடுப்பதோடு நின்றுவிடாமல் அவர்களை நல்ல தலைவர்களாக உருவாக்குவோம். 

வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள்தான். தோற்றுக்கொண்டே வாழ்ந்த இவர்கள்தான் சாதனையாளர்களாகவும் வரலாறுகளாகவும் மாறியிருக்கிறார்கள், மாறுகிறார்கள். தடைகளைத் தகர்தெரிந்தார்கள், வாய்ப்புகள் தவறும்போதும், மறுக்கப்படும்போதும் அவர்கள் வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அவர்களே வாய்ப்புகளாக மாறினார்கள்.
 

Add new comment

10 + 4 =