என்னால்தான் இதைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை மைக்கில் ஜோர்டன் | Jordan


கூடைப்பந்து விளையாடுபவர்களுக்கு மைக்கில் ஜோர்டன் ஒரு ஐக்கன், ஹீரோ, வழிகாட்டி, ஒரு உந்துசக்தி என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஜோர்டன் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர் அல்ல. அவருடைய தோல்விகள்தான் அவரை உலகின் தலைசிறந்த கூடைப்பந்து வீரராக உருவாக்கியது. என்னுடைய கூடைப்பந்து போட்டிகளில் 9000 (சாட்ஸ்) தடைவை கூடையில் போடாமல் தவறவிட்டிருக்கிறேன். 300 போட்டிகளில் தோற்றிருக்கிறேன். வெற்றிபெறுவதற்கான சாட் எடுப்பதற்கு நான்தான் சரியானவன் என்று என்னை நம்பிக்கொடுத்தபோது நான் 26 முறை தவறவிட்டிருக்கிறேன். தொடந்து பல முறை நான் தோல்விகளை சந்தித்துக்கொண்டும், தவறுகள் செய்துகொண்டும் இருந்திருக்கிறேன். அதனால்தான் கூடைப்பந்து விளையாட்டு உலகில் புகழ்பெற்றவனாக இருக்கின்றேன் என்கிறார் ஜோர்டன். கடினப்பட்டு தெரியாத புதிய யுத்திகளைக் கற்றுக்கொள்ள சிறப்பான பயிற்சி எடுத்தார். 
17 பிப்ரவரி 1963 இல் அமெரிக்காவில் பிறந்தார். அவருடைய தந்தை வங்கியில் வேலைசெய்து வந்தார். பள்ளி பருவத்திலேயே கூடைப்பந்தின்மீது ஆர்வம் இருந்தது. ஆனால் அவருடைய உயரம் 1.80 மீ ஆக இருந்ததால் அவரை கூடைப்பந்து அணியில் சேர்க்க மறுத்துவிட்டார்கள். கடினப்பட்டு உழைத்து, தான் யாரென்று அவர்களுக்குக் காட்டவிரும்பினார். எனவே ஜூனியர் அணியில் விளையாடி 40 புள்ளிகள் எடுத்தார். பின்னர் தன்னுடைய உடற்பயிற்சியால் தன் உயரத்தைக் கூட்டினார். பின்னர் அணியில் சேர்க்கப்பட்டார். எல்லா போட்டிகளிலும் 25 புள்ளிகளுக்கு அதிகமாகவே எடுத்தார். 1981 இல் மேக் டொனால்டுவின் அனைத்து அமெரிக்க விளையாட்டில் பங்குபெற்று 30 புள்ளிகள் எடுத்தார். 1965 ஆகஸ்டு 26 அன்று இத்தாலியில் நடைபெற்ற நைக் எக்ஸிபிசன் கேமில் அவர் அடித்த டங்க் சாட்டானது, கண்ணாடி போர்டையே உடைத்தது. 6 அக்டோபர் 1993 இல் ஜோர்டன் தன்னுடைய கூடைப்பந்து விளையாட்டிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். 2020 இல் அவருடைய சூ ஏலமிடப்பட்டது, அது 615000 டாலருக்கு விற்றது.

ஏன் ஜோர்டன் எல்லாக் காலத்திலும் மிகவும் சிறந்த கூடைப்பந்து வீரராகக் கருதப்படுகிறார் என்றால், ஜோர்டன் ஒவ்வொரு முறை விளையாடும்போது, விளையாட்டில் வெற்றி பெறவேண்டும், வெற்றி பெறுவது என் கையில்தான் உள்ளது என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டார் நம்பினார். அவ்வாறே விளையாடினார். நம்மால்தான் இந்த வேலை செய்யமுடியும் என்று நம்பி செய்ய ஆரம்பித்தோம் என்றால் நாமும் இவ்வுலகில் பலருக்கும் உந்து சக்தியாக இருப்போம்.

வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள்தான். தோற்றுக்கொண்டே வாழ்ந்த இவர்கள்தான் சாதனையாளர்களாகவும் வரலாறுகளாகவும் மாறியிருக்கிறார்கள், மாறுகிறார்கள். தடைகளைத் தகர்தெரிந்தார்கள், வாய்ப்புகள் தவறும்போதும், மறுக்கப்படும்போதும் அவர்கள் வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அவர்களே வாய்ப்புகளாக மாறினார்கள்.
 

Add new comment

8 + 4 =