எந்த வயதிலும் சாதிக்கலாம் - கர்னல் கார்லென்ட் டேவிட் சான்டர்ஸ் | KFC


9 செப்டம்பர் 1890 இல் அமெரிக்காவில் பிறந்த இவர். பல்வேறு வேலைகளில் ஈடுபட்டார். அதே வேலையில் தனக்கு பிடித்தமான சிக்கன் செய்யும் புதிய முறையையும் உருவாக்கிக்கொண்டே வந்தார். பிரசர் பிரையர் முறைக்கு (வெப்ப அழுத்தத்தில் பெரிக்கும் முறை) சொந்தக்காரர் இவரே. தன்னுடைய சொந்த உணவகம் மூடப்படும் நிலைவந்தபோதும், இவர் தொடர்ந்து தான் உருவாக்கிய புதிய முறையில் சிக்கன் செய்வது எப்படி என்பதை அமெரிக்கா நாடு முழுவதும் பரப்பி வந்தார். அதற்கு கென்டக்கி பிரைடு சிக்கன் என்ற பெயரைச் சூட்டினார். பின்னர் அது உலகெங்கும் பரவத் தொடங்கியது. தன்னுடைய 73 ஆம் வயதில் (1964) கம்பெனியை 2 மில்லியன் டாலருக்கு விற்றார். ஆனால் கனடாவிலுள்ள கம்பெனியின் செயல்பாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அனைவரும் குறைந்த விலையில், நல்ல உணவு சாப்பிடவேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருந்தது. உணவுமுறையில் ஒரு சகாப்தத்தை உருவாக்கினார். 
நாமெல்லாம் விரும்பி உண்ணும் கேஎப்சி சிக்கன் சுவைமுறையை உருவாக்கியபோது அது நிராகரிக்கப்பட்டது. ஒரு முறை, இரு முறை அல்ல, 1009 முறை நிராகரிக்கப்பட்டப் பின்னர்தான், உணவகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆக, காலம் கடந்துவிட்டதே இனி என்ன செய்யமுடியும் என்று ஒரு நிமிடம்கூட யோசிக்காததால்தான் அவர் அவருடைய இதயம் விரும்பியதை, பல்வேறு மக்களுக்கு பயனுள்ளவிதமாக கொடுக்கமுடிந்தது. சாதிப்பதற்கு வயதில்லை. உழைப்பு, உணர்வுப்பூர்வமான தேடலும். மகிழ்வின் வெற்றியை அனுபவிக்க உதவும்.

 

வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள்தான். தோற்றுக்கொண்டே வாழ்ந்த இவர்கள்தான் சாதனையாளர்களாகவும் வரலாறுகளாகவும் மாறியிருக்கிறார்கள்இ மாறுகிறார்கள். தடைகளைத் தகர்தெரிந்தார்கள்இ வாய்ப்புகள் தவறும்போதும்இ மறுக்கப்படும்போதும் அவர்கள் வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அவர்களே வாய்ப்புகளாக மாறினார்கள் 

Add new comment

1 + 2 =