உழைப்பின் வியர்வை வாழவைக்கும் தாமஸ் ஆல்வா எடிசன் | Edison


இவர் தன்னுடைய சிறுவயதிலிருந்து சரியாகப் புரியப்படாதவர். இவருடைய ஆசிரியர் நீ எதையும் கத்துக்கிற அளவுக்கு உனக்கு அறிவு இல்லை என்றார். படித்து வேலைக்குச் சென்ற முதல் இரண்டு இடங்களில் நீ எதையும் செய்யக்கூடிய திறமையில்லை என்று வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள். தானாக புதியதைப் படைக்க முயன்றார். தனது 10,001 வது முயற்சியில் மின்விளக்கினைக் கண்டறிந்தார். எல்லா தோல்விகளும் ஒரு அழகான வெற்றிக்கு வழிகாட்டுகிறது.  யார் சொன்னது நான் 10,000 முறை தோற்றேன் என்று, என் வேலைக்கு பயன்படுத்தக்கூடாத 10,000 வழிகளைக் கண்டுபிடித்திருக்கின்றேன் என்கிறார் எடிசன். அமெரிக்காவில் 1,093 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை எடிசன் பெயரில்தான் உள்ளது.

11 பிப்ரவரி 1847 இல் அமெரிக்காவில் பிறந்தார். அமெரிக்காவின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர் என வர்ணிக்கப்படுகிறார். அவருடைய பள்ளிப் பருவத்தில் ஆசிரியராகிய அவருடைய தாயே அவருக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தார். தனது 12 ஆம் வயதில் கேட்கும்திறனில் பிரச்சனை வந்தது. ஒரு காது சுத்தமாக கேட்கவில்லை. மற்ற காது கொஞ்சம் கேட்டது. காதுகேட்காததுதான் எனக்கு கவனச்சிதறல் வராமல் தடுத்தது என்று தன்னுடைய கேட்கும்திறனில் உள்ள பிரச்சனையை நேர்மறையாக கையாண்டார். தனது 13 ஆம் வயதில் இரயிலில் காய்கறிகள், செய்தித்தாள்கள் விற்று வாரம் 50 டலர்கள் சம்பாதித்தார். அவற்றை வைத்து தனக்கு தேவையான கண்டுபிடிப்பு உபகரணங்கள் வாங்கினார். 

இரயில் பாதையில் விழுந்த சிம்மி மெக்கன்சி என்ற சிறுவனை காப்பாற்றியதால், அவனுடைய தந்தை இவரை தந்தி இயக்குபவராக பயிற்சி அளித்து, ஒரு தந்தி இயக்குபவராக பணி அமர்த்தினார். அதுவே அவருடைய கண்டுபிடிப்புகளுக்கு தூண்டுதலாக அமைந்தது. அவருடைய மூன்று முக்கிய கண்டுபிடிப்புகள் மின்விளக்கு, ஒலிப்பதிவுக் கருவி மற்றும் இயக்க பட கேமரா.  எடிசன் வாழ்விலிருந்து நாம் நினைவில் கொள்ளவேண்டியது: மேதை என்பவன் 1 சதவீதம் தூண்டுதல், உற்சாகம், 99 சதவீதம் வியர்வை, உழைப்பின் வியர்வை. 

 

வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள்தான். தோற்றுக்கொண்டே வாழ்ந்த இவர்கள்தான் சாதனையாளர்களாகவும் வரலாறுகளாகவும் மாறியிருக்கிறார்கள், மாறுகிறார்கள். தடைகளைத் தகர்தெரிந்தார்கள், வாய்ப்புகள் தவறும்போதும், மறுக்கப்படும்போதும் அவர்கள் வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அவர்களே வாய்ப்புகளாக மாறினார்கள்.

Add new comment

6 + 11 =