இவர்கள் இல்லாத உலகம் எப்படி இருந்திருக்கும்?


இவர்கள் இல்லாத உலகம் எப்படி இருந்திருக்கும்? 
இவர்கள் இல்லாத நாட்கள் நாம் எப்படி சமாளித்திருப்போம்?
ஒரு வேலை இப்படி பட்ட மக்கள் பிறக்காமல் இருந்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும்?

யாரைப்பற்றி பேசுகிறோம்? என்ன புதுமை செய்தார்கள் இவர்கள்? அப்படி என்ன சிறப்பு இவர்களுக்கு?

உலகமே கொரோனா நோயினால் அச்சமுற்று வீடுகளில் பதுங்கி ஒளிந்துகொண்டு நேரங்களில் மிகவும் துணிச்சலோடு முன்னணி தொழிலாளர்களாய் தங்கள் உயிரைப் பற்றியும் கூட கவலைப்படாமல் சமூகத்திற்காக பணிபுரிந்தவர்களுக்காக இந்த படைப்பு சமர்ப்பணம்!

ஊரடங்கு என்றதும் வீடடங்கி நாமிருக்க
போர்முரசு அறைந்ததும் மக்களை காக்க 
ஊர் எல்லையில் குவியும் போர்வீரர்களாய் 
தன்னலம் கருதா நம்மில் சிலருக்கு 
நன்றி கூறும் விதமாக இக்கவிதை!

மன்னனை காக்கும் போர்வீரர்களாய் 
தூய்மை பணியில் சிறு தாய்மை
உணர்வோடு சிலர்!

சேயை காக்கும் தாயாய் 
மருந்தளித்து நோய்போக்கிய
மருத்துவர் செவிலியராய் 
மனித நேயத்தோடு சிலர்!

பாதுகாக்கும் காவலராய் 
தேசப்பற்றோடு சிலர்!

உயிர்காற்றை சுமக்கும் குருதியை
ஊர்தோறும் உயிர்காக்கும் ஊர்தியில்
உற்றத்தோழன் போல் ஓடிவரும் 
தோழமையோடு  சிலர் என

முன்பின் அறியா 
முகங்களை காக்க 
முன்வரிசையில் நின்று 
முனைப்புடன் பணியாற்றும் 
முக்களவீரர்களுக்கு 
உள்ளம் நெகிழ்ந்த நன்றி!  

படைப்பு: வே. குணசேகரி 

Add new comment

15 + 1 =