Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இறைபிரசன்னத்தால் நிறைவுபெறும் குடும்பமாக....
பிறப்பால் வளர்ப்பால் குணத்தால் பொருளாதாரத்தால் முற்றிலும் மாறுபட்ட என் தந்தையும் தாயும் ஒன்றாக இணைந்து இத்தணை ஆண்டுகள் வாழ்ந்துவருவதும், என் அண்ணன் தம்பி அவர்கள் மனைவிகள் பிள்ளைகள் எல்லாவிதத்திலும் மாறுபட்ட, தனித்தன்மையுள்ள நபர்களாக இவ்வுலகில் பிறந்து வளர்ந்தாலும்கூட இணைந்து ஒரே குடும்பமாக வாழ்ந்துவருவதும் எனக்கு மகிழ்வையும் ஆச்சரியத்தையும் கொடுத்தாலும், இதே சூழ்நிலையில் ஒரே குடும்பமாக இணைய மறுத்து தனித் தனித் தீவுகளாய் வாழுகின்ற எத்தனையோ குடும்பங்களைப் பார்;த்து என் மனம் இனம்புரியாத உணர்வுகளுடான கேள்விகளை எழுப்புகின்றது.
அப்படியென்றால் கடவுளின் படைப்பிலே தனித்தன்மையோடு படைக்கப்பட்ட நாம் அடிப்படையில் இணைந்துவாழ அழைக்கப்பட்டிருக்கின்றோமா? எதனடிப்படையில் நாம் இணைய முடியும் என்பதே என் தேடல்.
நான் தவறு செய்தால் - நான் பாவம் செய்துவிட்டேன், கடவுளே என்னை மன்னியும் என்று சொல்லி பாவமன்னிப்புப்பெற்று புனிதரைப் போல ஆலயத்தைவிட்டு வெளியே வரும் நான், என்னுடைய சொந்த சகோதர சகோதரிகளோ, கணவன் மனைவியோ, அக்காள் தங்கையோ அதே தவறை செய்துவிட்டு என்னைப்போல ஆலயம் சென்று மன்னிப்புப் பெற்று வந்தாலும்கூட நான் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை, மாறாக அவர்களை மாபெரும் குற்றவாளிகளாகதான் பார்க்கின்றேன்.
இன்று நம் மத்தியில் வாயதாகியும் பக்குவப்படாதவர்களும் இருக்கி;ன்றார்கள். மரணப்படுக்கையில் பக்குவமடைந்தவர்களும் இருக்கின்றார்கள் - ஆனால் கடவுள் எல்லாருக்கும் மரணப்படுக்கையில் அதாவது கடைசித் தருணத்தில் பக்குவமடையும் வாய்ப்பைத் தரமாட்டார்.
எனவே நல்ல குடும்பங்களாக இணைய வேண்டுமென்றால் நம்மை நாம் ஏற்றுக்கொண்டு, மன்னிப்பதுபோல, பிறரையும் ஏற்றுக்கொள்ளளும் பக்குவம் பெறவேண்டும். முதலில் நம்மை நாம் நம் குறைநிறைகளோடு ஏற்றுக்கொள்வோம், பிறரை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெறுவோம்.
எப்பொழுதும் நான் இப்படித்தான் என்று என்னையே ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து அந்த வட்டத்திலிருந்து வெளியேவர மறுக்கின்றேன். அதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை, மற்றவர்களையும் என்னுடைய வட்டத்திலிருந்து பார்த்து என்னுடைய பார்வையை அவர்களில் திணித்து நான்; நினைக்கும் “நல்லவர்”களாக அவர்களை மாற்ற முயலுகின்றேன் (எல்லாரையும் இம்மானுவேல் மரியானாக மாற்றும் முயற்சி). இது கடவுளின் படைப்பின் நோக்கத்திற்கு எதிரான மன்னிக்கமுடியாத பாவம்.
சில வேளைகளில் நான் என்னுடைய தனித்தன்மையையும் (Uniqueness), என்னுடைய சார்புதன்மையையும் (Interdependence) குழப்பிவிடுகின்றேன். நான் தனித்தன்மை என்று சொல்லுகின்றபோது எனக்குமட்டுமே கடவுள் கொடுத்துள்ள திறமைகள், சக்திகள். ஆனால் என்னுடைய குணநலன்கள் அல்ல ஏனென்றால் என்னுடைய குணநலன்களெல்லாம் நான் கற்றவை. காலத்தின் அடிப்படையில் நான் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கு ஏற்ப அவற்றை என்னால் மாற்றிக்கொள்ளமுடியும், உருவாக்கிக்கொள்ளமுடியும்.
சில விசயங்களை நான் மற்றவர்களுக்காக, குடும்பத்தின் நலனுக்காக மாற்;றிக்கொள்ளவேண்டும். அது என்னுடைய சார்புதன்மையை உணர்த்தும், இணக்கத்தையும் ஆழப்படுத்தும். அதேநேரத்தில் என்னுடைய சார்புதன்மையை உணராமல் அதை என்னுடைய தனித்தன்மையோடு இணைத்து குழம்பி – நான் தனித்தன்மை உடையவன், நான் இப்படித்தான் இருப்பேன் என்று என்னை நியாயப்படுத்த முயன்றால் இழப்பு எனக்குதான் என்று சொல்லுவார்கள். அது அப்படி இல்லை மாறாக இழப்பு என்பது என்னைச் சார்ந்தவர்கள் ஒவ்வொருவருக்குமே.
நம்மை நாம் ஏற்றுக்கொள்வதுபோல நம்மிடையே வாழ்பவர்களை ஏற்றுக்கொள்ளும் பழக்கமும், நம்முடைய தனித்தன்மைக்கும், சார்புதன்மைக்கும் உள்ள வித்யாசம் புரிந்த வழிமுறைகளும் நம்மிடம் வளர ஆரம்பித்தால், நாம் ஒருவர் மற்றவருடைய பொறுப்புள்ள சுதந்திரம் என்னவென்று கற்றுக்கொள்வோம்.
மற்றவர்களுடைய தார்மீக உணர்வுகளை மதிப்பதும்;, அவர்கள் சிந்தித்துச் செயல்பட அவர்கள் வைத்திருக்கும் தனிமனித உலகத்திற்குள் அத்துமீறி வன்முறையோடு நுழைவதைத் தவிர்க்கவும் கற்றுக்கொள்வோம்.
ஆக ஒருவர் மற்றவரை குறைநிறைகளோடு ஏற்று, நம்முடைய சார்புதன்மையின் முக்கியத்துவத்தை அறிந்து, மற்றவர்களின் தனித்தன்மையை மதித்து நம்மை நாம் பொறுப்புள்ள சுதந்திரத்தைச் சுவாசிப்பவர்களாகப் பக்குவப்படுத்தினால் நாம் குடும்பமாக இணைந்து வாழலாம்.
இப்பண்புகள் நம்மில் மிளிர, நம் குடும்பத்தில் நிறைவையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர அடிநாதமாக நமக்கு இருக்கவேண்டியதும், விவிலியக் குடும்பங்களும் நமக்கு கற்றுத்தருவதும்: “கடவுளின் பேழை ஓபேது-ஏதோம் வீட்டில் அவர் வீ;ட்டாரோடு மூன்று மாதம் இருந்தது. அந்நாளில் அவர் வீட்டாருக்கும் அவருக்கு உரிய அனைத்திற்கும் ஆண்டவர் ஆசி வழங்கினார்” (1 குறிப்பேடு 13:14). ஆக கடவுளின் பிரசன்னம் நம்முடைய இல்லங்களில் குடிகொண்டிருந்தால் நாம் எப்பொழுதும் ஆசி பெறுபவர்களாக இருப்போம். மேலும் “நம்பிக்கைக் கொண்டோhரின் குடும்பத்தினருக்கும் நன்மைகள் செய்ய முன்வருவோம்” என்கிறார் புனித பவுல் (கலாத்தியர் 6:10).
ஆக கடவுளின் பிரசன்னம் குடிகொள்ளும் குடும்பங்களில் ஆசியும், நன்மைத்தனங்களும் நிறைந்திருக்கும். விவிலியத்தின் தொடக்கத்திலிருந்து ஆதாம் ஏவாள் தொட்டு கடவுளின் பிரசன்னம் குடும்பங்களில் இருக்கின்றது. தவறும்போது நெறிப்படுத்தியிருக்கின்றது, மனம் நெகிழும்போது ஆசியால் நிரப்பியிருக்கி;ன்றது.
தொடக்காலத் திருஅவையில்கூட குடும்பங்களை மையப்படுத்திதான் உயிர்த்த இயேசுவின் நற்செய்தியை எடுத்துச் சென்றார்கள். குடும்பங்களில் இறைவனின் பிரசன்னத்தை கொண்டுவந்தார்கள். எல்லாச் சூழ்நிலையிலும் மகிழ்;ச்சியோடு வாழ்வதற்கான வழிமுறைகளையும், சக்தியையும் பெற்றார்கள் என்பதை திருத்தூதர்பணிகள் நூலிலும், புனித பவுலின் மடல்களிலும் காண்கின்றோம்.
நம்முடைய குடும்பங்களில் எவ்வாறு இறைபிரச்சன்னத்தைக் கொண்டுவரப் போகின்றோம். குடும்பமாக இணைந்து செபிப்பது. செபத்தில் பகிர்வது. கடவுளின் மாபெரும் இரக்கப்பெருக்கில் நம் குடும்பத்தை அர்பணிப்பது. இணைந்து உணவு உண்பது. இணைந்து ஆலயங்களுக்கு செல்வது. குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் கடவுளுக்கு நன்றி; சொல்ல அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது. எங்கு சென்றாலும் ஒரு சிறிய செபமாவது செபித்துவிட்டு செல்ல வேண்டும் என்னும் அனுபவத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களை நெறிப்படுத்துவது. அதற்கு நாமே அவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது. இறந்த ஆன்மாக்களும் காவல்தூதர்களும் நம்மை பாதுகாக்கின்றார்கள் என்ற நம்பிக்கையை அவர்களில் ஆழமாக உருவாக்குவது. இறந்த ஆன்மாக்களின் பரிந்துரையை எப்பொழுதும் நாடுவதற்கு அவர்களைப் பழக்குவது. இதுபோன்ற அடிப்படையான செயல்கள் அனைத்தையும் குடும்பத்திற்குள்ளும்;
மேலும், குடும்பத்திற்கு வெளியே நம்முடைய குழந்தைகளுக்கும், ஏழைகளுக்கும், தேவையில் இருப்பவர்களுக்கும் உதவும் பழக்கத்தையும், பொறுப்புணர்வோடு பொது இடங்களில் நடந்து கொள்வதையும், படிக்கும் இடங்களில் இருக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்துவதையும், மனிதநேய செயல்களில் ஈடுபடுவதையும், நான் என்ற ஒரு வட்டத்திற்கு அப்பால் நாம் என்ற ஒரு பெரிய அழகமான உலகம் இருக்கின்றது என்பதை மற்றவர்களுக்கு தங்களின் செயல்களால் எடுத்துக்காட்டுபவர்களாகவும் செயல்பட்டால்,
நம்முடைய குடும்பம் ஒரு எடுத்துக்காட்டான, இறைபிரச்சனத்தால் நிரம்பும் குடும்பமாக இருக்கும். இதைக் காணும் ஒவ்வொருவரும் கேட்கும் கேள்வி “இக்குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் நல்வாழ்க்கைக்கும் அடிநாதமாய் விளங்குவது என்ன?
Add new comment