இதுவும் ஓர் ஆயுதமே!


குளுமையான பனிப்பிரதேசமான காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிறந்தவர், பேபி ஹால்டர். தனது 4 வயதில் தாயால் கைவிடப்பட்டவர். 6 வகுப்பில் தனது தந்தை மற்றும் வளர்ப்புத்தாய் ஆகியோரால் கட்டாயமாக பள்ளி படிப்பை கைவிட்டார், பேபி.

"எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒரு நாள் நான் என் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது என்னை அழைத்து சென்று புடவை கட்ட வைத்தார்கள். நான் முன்பு பார்த்திராத ஒரு வயதான மனிதருடன் மண்டபத்தில் அமரவைத்தார்கள். அவருடன் வீட்டிற்கு வரும்படி கேட்கப்படும் வரை, இது ஒரு பூஜை என்று நான் நினைத்துக்கொண்டு இருந்தேன்."

12 வயதான பேபிக்கு தன்னை விட 14 வயது பெரியவரை திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.

பள்ளிக்கோ அல்லது விளையாடுவதற்கோ தனது நண்பர்கள் சென்றபோது, பேபி ஒரு குழைதைக்கு தாயானார். அவருடைய விதி முன்பு இருந்தததை விட வேறுபட்டதாக இல்லை.

அந்த விதியை வெல்ல, 1999 ஆம் ஆண்டில், 25 வயதில் தனது மூன்று குழந்தைகளுடன், பேபி தனது குழந்தையை விட்டு வெளியேறி, டெல்லிக்கு சென்று தனது புதிய வாழ்க்கையை தொடங்கினார்.

டெல்லியில், பல வீடுகளில் வீட்டு உதவியாளராக பணிபுரிந்தார். கணவனை விட்டு பிரிந்து வந்த பெண் என்பதால், அந்த பகுதியில் இருக்கும் மக்கள் அவரை அவமானப்படுத்தினர். ஹால்டர், குருகிராமில் எழுத்தாளர் மற்றும் ஓய்வு பெட்ரா மானுடவியல் பேராசிரியர் பிரபோத் குமாரின் வீட்டில் பணியாற்ற தொடங்கியபோது அவரது வாணலின் திருப்புமுனை ஏற்பட்டது.

மிகவும் சிறப்பாக நான்கு ஆண்டுகள், ஹால்டர் பணிபுரிந்து வந்தார். ஒரு நாள் அலமாரியை சுத்தம் செய்துக்கொண்டிருக்கும்போது, அவரின் கைகள் அங்கு இருந்த புத்தகங்களை நோக்கி நகர்ந்தன. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய பின் படிப்பிற்கான தனது கனவை இழந்த பேபியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. யாரும் இல்லாத நேரங்களில், அந்த புத்தகங்களை திறந்து பார்த்து அவற்றின் பக்கங்களை தொட்டு பார்த்து மகிழ்ச்சி அடைவார்.

இவை அனைத்தையும் அந்த பேராசியர் கவனித்துக்கொண்டிருந்தார்.

அமர் மெய்பெலா முதல் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்கள் வரை, அவர் ஹால்டரை படிக்க ஊக்குவித்தார். அவர் விரும்பியதை செய்ய ஒருபோதும் தாமதமில்லை என்பதை வலியுறுத்தினார். "அமர் மெய்பெலாவைப் படித்தால் என் வாழக்கையை நானே படிப்பது போல உணர்ந்தேன்" என்று ஹால்டர் கூறுகிறார்.

பேராசிரியர் குமார், தென்னிந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள இருந்தபோது, ஒரு வேற்று புத்தகத்தை ஹால்டரிடம் கொடுத்து எழுதும்படி கேட்டார்.

விசித்திரமான வேண்டுகோளால் குழம்பிய ஹால்டர், என்ன எழுதுவது என்று திணறினார்.  தனது குழந்தைப்பருவம்  முதல் தான் அனுபவித்த வேதனைகளை எல்லாம் எழுதினார். சரியாக எழுதவோ வாக்கியம் அமைக்கவோ தெரியவில்லை என்றாலும், தனக்கு தெரிந்த முறையில் எழுதினர். பேராசிரியர் மீதும் வந்து பார்க்கையில், ஏற்கனவே 100 பக்கங்களுக்கும் மேல் ஹால்டர் எழுதியிருந்தார்.

திருத்திய படிவத்தை படித்த பேராசிரியரின் கண்களில் கண்ணீர் வடிந்தது. அந்த புத்தகத்திற்கு அவர் ஆலோ அந்தரி. அதை வெளியிடுவதற்காக பல பதிப்பகங்களை நாடினார். யாருமே தயாராக இல்லாத நிலையில், ரோஷ்ணி பதிப்பகம் அந்த புத்தகத்தை வெளியிட சம்மதம் தெரிவித்தனர். அதுமுதல் எல்லாம் நலமாக ஹால்டரின் வாழ்வில் நடந்தது.

இன்று அந்த புத்தகமானது, 21 இந்திய மொழிகளிலும் 13 அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு, மேலும் இரண்டு புத்தகங்களை ஹால்டர் எழுதினார். "எழுத்து, இதுவரை இல்லாத ஓர் அடையாளத்தை எனக்கு கொடுத்தது. இதுவே என் வாழ்க்கை" என்று கூறுகிறார், ஹால்டர்.

பெண் பிள்ளைகளுக்கு இந்த சமுதாயத்தில், கல்வி மிகவும் தேவையான ஒரு ஆயுதமே. நாம் விரும்பும் செயலை செய்வதற்கு என்றும் தாமதமேயில்லை.

அடுப்படியில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு படிப்பறிவு கற்றுத்தர நாம் தயாரா?

 

Add new comment

1 + 3 =