இணைய அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களைப் பாதுகாக்க….. | Geethanjali Rao


இவருடைய சாதனைகள் மனித வளர்ச்சியில் சாதாரண ஞானத்தையும் மிஞ்சுகிறது என்றே கூறுகிறார்கள். 15 வயதில் ஒரு அறிவியல் விஞ்ஞானியாக, புதிய படைப்பாளியாக, ஊக்கமூட்டும் பேச்சாளராக, உலகத்தைப் புதியதாக மாற்றவும் அறிவியல் தொழில்நுட்பத்தால் மனித துன்பங்களை அகற்றுவதற்கும் முயன்று கொண்டிருக்கிறார்.

அவருடைய டிவிட்டர் பக்கத்தில் அவரை ஒரு மாணவராக, வாள் சிலம்பக்காரராக, படைப்பாளியாக, எழுத்தாளரர், பேச்சாளராக, சமூக தன்னார்வ ஊழியராக, அறிவியல் ஆர்வலராக, ஸ்டெம்ப் பரப்புபவர் மற்றும் நிர்வாக உறுப்பினராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். டைம் இதழ் 2000 ஆம் ஆண்டின் சிறுவர் விருதுக்காக இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த விருதிற்கு ஏறக்குறைய 5000 சிறுவர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

12 வயதில் டெட் டாக்ஸில் (Ted Talks) பேசினார். மூன்று டெட் டாக்ஸ் கொடுத்திருக்கிறார். இன்னும் பல கருத்துரைகள் கொடுத்திருக்கிறார். அவருடைய வெற்றியின் இரகசியத்தை ஆஞ்சலினா ஜீலியிடம் வெளிப்படுத்தினார். வாழ்வில் எனக்குள்ள ஆர்வம், மற்றவர்மீதுள்ள அக்கறை, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஆர்வம். அவர் அந்த நேர்காணலில் பங்கு கொண்டவிதமும், அவருடைய தோற்றமும் அனைவரின் இதயத்தையும் திருடியது.

எ எங்க் இன்னவேட்டர்ஸ் கைடு டு ஸ்டெம்: 5 ஸ்டெப்ஸ் டு பிராப்லம் சால்விங் பார் ஸ்டுடெண்ட்ஸ், எடுகேட்டர்ஸ் அன்ட் பேரன்ட்ஸ் (A young innovator's Guide to STEM: 5 Steps to Problem-solving for students, Educators and Parents) என்னும் அவருடைய புத்தகத்தை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டார்கள். அவருடைய நோக்கம் என்னவென்றால் அனைவரும் பிரச்சனைகளைத் தீர்ப்பவர்களாக மாறவேண்டும். அறிவியலை ஏதோ ஆராய்ச்சியகத்தில் உள்ளதாக அல்லாமல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கனதாக்க வேண்டும் என்ற இவரின் பங்களிப்பு போற்றுதற்குரியது. 
2017 இல் டிஸ்கவரி சேனலின் அமெரிக்காவின் டாப் எங்க் சையன்டிஸ்ட் அவார்டு (வுழி லுழரபெ ளுஉநைவெளைவள யுறயசன) பெற்றார். அவருடைய புதுமைப் படைப்புகள் அனைத்தும் செய்திகளைப் பார்ப்பதிலே விழைந்தது என்று எளிமையாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

இணைய அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களைப் பாதுகாக்க முiனெடநல யுpp என்ற ஆப்பினை உருவாக்கியிருக்கிறார். ஆக வாழ்க்கை என்பது மானுட வளர்ச்சியின் படிக்கலாய் அமைவது, அதற்கு நம்முடைய வயது தடையல்ல என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார்.

வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள்தான். தோற்றுக்கொண்டே வாழ்ந்த இவர்கள்தான் சாதனையாளர்களாகவும் வரலாறுகளாகவும் மாறியிருக்கிறார்கள், மாறுகிறார்கள். தடைகளைத் தகர்தெரிந்தார்கள், வாய்ப்புகள் தவறும்போதும், மறுக்கப்படும்போதும் அவர்கள் வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அவர்களே வாய்ப்புகளாக மாறினார்கள்.
 

Add new comment

7 + 3 =