Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இசையை தன்னுடைய முழு உடலாலும் வெளிப்படுத்தியவர் எல்விஸ் பிரெஸ்லி | Elvis
எக்காலத்திலும் புகழ்பெற்ற ஒரு கலைஞர் என்றால் அவர் எல்விஸ். 8 ஜனவரி 1935 இல் அமெரிக்காவில் பிறந்தார். இவர் இறந்து பல ஆண்டுகள் கழித்தும் எல்விஸ் என்பது குடும்பப் பெயராகவே இருந்தது. 1954 இல் இவர் யாரும் அறியாத ஒரு நபர். இவர் கிராண்ட் ஒலாப்ரி என்ற இசை அமைப்பில் பணியில் இணைந்தார். அவர் தன்னுடைய முதல் இசையை அரங்கேற்றியபோது, அந்த அமைப்பின் மேலாளர் சிம்மி டென்னி திட்டித்தீர்த்துவிட்டு, உன்னால் எந்த உயரத்திற்கும் செல்லமுடியாது, பேசாம போய் வண்டி ஓட்டவேண்டியதுதான் என்று சொன்னார். அதுதான் எல்விஸ்.
எல்விஸினுடைய புகழ்பெற்ற பாடல் கேனாட் கெல்ப் ப்பாலிங் இன் லவ். அவருக்குப் பிடித்தமான பாடல் டோன்ட் பி க்ருவல். 20 ஆம் நூற்றாண்டின் மிக சிறப்பான கலாச்சார சின்னமாக இருந்தவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் பாடலை பாடுகின்ற விதமும், இவருடைய உடல் அசைவுகளை அதற்கு ஏற்றவாறு இயக்குவதும் ரசிகர்களை இவரின் கட்டுப்பாட்டுக்குள் வைத்தது. ராக் அன்ட் ரோல் இசை முறையை அறிமுகம் செய்தார். அதுவே அமெரிக்காவின் கலாச்சார மையம் என்றும் கருதினார்.
வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள்தான். தோற்றுக்கொண்டே வாழ்ந்த இவர்கள்தான் சாதனையாளர்களாகவும் வரலாறுகளாகவும் மாறியிருக்கிறார்கள், மாறுகிறார்கள். தடைகளைத் தகர்தெரிந்தார்கள், வாய்ப்புகள் தவறும்போதும், மறுக்கப்படும்போதும் அவர்கள் வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அவர்களே வாய்ப்புகளாக மாறினார்கள்.
Add new comment